கொல்கத்தா நைட்ரைடர்ஸ் பயிற்சியாளரானார் அபிஷேக் நாயர்!

0
28

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியில் கடந்த 3 ஆண்டுகளாக தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வந்த சந்திரகாந்த் பண்டிட் இந்த சீசனுடன் அணியில் இருந்து விலகினார்.

இந்நிலையில் புதிய தலைமை பயிற்சியாளராக 43 வயதான அபிஷேக் நாயர் நியமிக்கப்பட்டுள்ளார். அபிஷேக் நாயர், இந்திய கிரிக்கெட் பயிற்சியாளர்கள் வட்டராத்தில் பிரபலமானவர். ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், தினேஷ் கார்த்திக் உள்ளிட் டோருக்கு தனிப்பட்ட முறையில் பயிற்சியாளராக இருந்துள்ளார்.

இந்திய அணிக்காக 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ள அபிஷேக் நாயர், கவுதம் கம்பீர் இந் திய அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டதும் பேட்டிங் பயிற்சியாளர் பணிக்கு அமர்த்தப்பட் டார். 9 மாதங்கள் பணியாற்றிய அவர், சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டிக்கு பிறகு நீக்கப்பட்டிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here