காந்தி, நேரு, அம்பேத்கருக்கு அபிஜித் திப்கே புகழாரம்

0
21

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகளில் (எஸ்ஐஆர்) முறைகேடுகள் நடைபெற்றதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன. இந்த விவகாரத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி, மும்பை சிவாஜி பூங்காவில் கடந்த வெள்ளிக்கிழமை கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மகாத்மா காந்தியின் பிறந்தநாளையொட்டி நடந்த இந்தப் போராட்ட மேடையில், அகிம்சை மற்றும் எளிமையை வலியுறுத்தும் மேற்கோள்களும், பாபாசாகேப் அம்பேத்கரின் திருவுருவப் படங்களும் இடம்பெற்றிருந்தன. இதனைத் தொடர்ந்து, சனிக்கிழமை சிஜேபி நிறுவனர் அபிஜித் திப்கே வெளியிட்ட வீடியோவில், “மகாத்மா காந்தி இந்தியாவின் ஆன்மா, பி.ஆர்.அம்பேத்கர் முதுகெலும்பு, ஜவஹர்லால் நேரு மூளை. நீங்கள் அவர்களைப் போல ஆகவே முடியாது” என பேசியுள்ளார்.

இதற்கிடையே, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகாவிட்டால், நாடு முழுவதும் உள்ள இளைஞர் களைத் திரட்டி அக்டோபர் 10-ம் தேதி டெல்லி ஜந்தர் மந்தரில் அமைதியான முறையில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என திப்கே எச்சரித்துள்ளார்.

மகாத்மா காந்தி காட்டிய அகிம்சை வழியில் இந்த அறப்போராட்டம் தொடரும் என்றும், ஜனநாயகத் தைப் பாதுகாக்க விரும்பும் அனைத்து குடிமக்களும் இதில் கலந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here