அம்பலக்கடை அருகே ஆற்றில் குளிக்கச் சென்ற வாலிபர் சேற்றில் சிக்கி உயிரிழப்பு – இன்று காலை உடல் மீட்பு!

0
29
Young man stuck in the mud and died
Young man stuck in the mud and died

கன்னியாகுமரி மாவட்டம் அம்பலக்கடை அருகே கேலேஸ்வரம் பகுதியில் ஆற்றில் குளிக்கச் சென்ற வாலிபர் ஒருவர் சேற்றில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

குழிவிளகத்துவிளையைச் சேர்ந்த பென்னட் என்பவரின் மகன் சந்தோஷ் (31), நேற்று ஆற்றில் குளிக்கச் சென்றபோது எதிர்பாராதவிதமாக சேற்றில் சிக்கியுள்ளார்.

இதையடுத்து, மீட்புக் குழுவினர் நேற்று தீவிரமாகத் தேடியும் அவரது உடலைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில், இன்று காலை ஊர் பொதுமக்கள் இணைந்து தேடியபோது சேற்றில் புதைந்திருந்த சந்தோஷின் உடல் மீட்கப்பட்டது.

இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here