வரலாற்று சாயலில் இயக்குநர் சரண் எழுதிய பாடல்!

0
28

இன்றைய இளைஞர்களின் உலகத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள படம் , ‘லவ் சப்ஸ்கிரைப் ஷேர்’. ஜேபி பிலிம்ஸ் சார்பில் பி.ரகு தயாரித்துள்ள இப்படத்தை ஆர்.மகாலட்சுமி முருகன் இயக்கியுள்ளார்.

ஆதவ் கிருஷ்ணா, சிம்ரன், படவா கோபி, வினோதினி, ஜாவா சுந்தரேசன், ரோஹித், தனஞ்செயன், முத்து புவன் நடித்துள்ளனர். அஷ்வமித்ரா இசை அமைத்துள்ளார். பிப். 20- ல் வெளியாகும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இயக்குநர் சரண் பேசும்போது, “இந்தப் படத்தில் ஒரு புரமோ பாடலை எழுதியுள்ளேன். இதற்கு முன், என் இயக்கத்தில் உருவான வட்டாரம் படத்தில் இடம்பெற்ற ‘யார் தருவார் இந்த அரியாசனம்’ என்ற பாடலை எழுதியிருந்தேன். அதன் பிறகு தொடர்ந்து பாடல்கள் எழுதும் வாய்ப்பு அமையவில்லை.

இந்த படத்தின் இயக்குநரை நீண்ட காலமாக அறிவேன். ‘இன்றைய காலத்திற்கேற்ற, ஒரு பாடல் வேண்டும்’ என்று என்னிடம் கேட்டார். அந்த பாடல், இன்றைய சமூகச் சூழ்நிலையை பிரதிபலிப்பதோடு மட்டுமல்லாமல், அதன் பின்னணியில் ஒரு வரலாற்றுச் சாயலையும் கொண்டிருக்க வேண்டும் என்று நினைத்தேன். அதற்காக, 1900-களில் சென்னை உருவாகிய காலகட்டத்தில், பயன்படுத்தப்பட்ட சொற்கள், அவற்றின் அர்த்தங்கள் மற்றும் அகராதி குறிப்புகளை ஆராய்ச்சி செய்தேன். அந்த காலத்துச் சொற்களைப் பாடலின் பின்னணியில் இணைத்தால் தனித்துவமான அழகு கிடைக்கும் என்பதால், அந்த ஆய்வின் அடிப்படையில் பாடலை உருவாக்கினேன். இது உங்களுக்கு பிடிக்கும்” என்றார்.

படக்குழுவினருடன் தயாரிப்பாளர் கதிரேசன், நடிகர் இளவரசு, பக்ஸ் என்கிற பகவதி பெருமாள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here