“தளராத அர்ப்​பணிப்​பால் எழுதப்படும் பயணம்” – ‘மண்டாடி’ பற்றி சூரி பகிர்வு

0
18

சூரி ஹீரோ​வாக நடிக்​கும் படம் ‘மண்டாடி’. மதி​மாறன் புகழேந்தி இயக்​கும் இந்​தப் படம், படகு பந்தயத்தை மையமாகக் கொண்டு உரு​வாகிறது. ஆர்​.எஸ்​.இன்ஃ​போடெ​யின்​மென்ட் சார்​பில் எல்​ரெட்குமார் தயாரிக்​கும் இப்​படத்​தில் தெலுங்கு நடிகர் சுஹாஸ், மஹிமா நம்​பி​யார், சத்​ய​ராஜ், ரவீந்​திரா விஜய், அச்​யுத் குமார் ஆகியோர் முக்​கிய கதா​பாத்​திரங்​களில் நடிக்​கின்​றனர்.

ஜி.​வி.பிர​காஷ் இசை அமைக்​கிறார். எஸ்​.ஆர்​.க​திர் ஒளிப்​ப​திவு செய்​கிறார். தமிழ், தெலுங்​கு, இந்தி உள்​ளிட்ட மொழிகளில் கோடை​யில் இப்​படம் வெளி​யாக இருக்கிறது.

இந்​நிலை​யில், இதன் படப்​பிடிப்​பில் கடலில் படகின் மீது உடற்​ப​யிற்சி செய்​யும் வீடியோவை வெளி​யிட்​டுள்ள சூரி, ரத்​தம், வியர்​வை, தளராத அர்ப்​பணிப்​பால் எழுதப்​படும் ஒரு பயணம் என்று ‘மண்​டாடி’ படத்​தை குறிப்​பிட்​டுள்ளார். இந்த வீடியோ இணை​யத்​தில் பரவி வரு​கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here