திரைப்பட பட்ஜெட் என்பது செலவு கணக்கு மட்டுமல்ல..! | ஒளி என்பது வெளிச்சமல்ல 58

0
16

திரைப்​படத் தயாரிப்பு முறைகளுக்​கும் ஒளிப்​ப​திவுக்​கும் இடை​யி​லான உறவைப் பேசும்​போது, பட்​ஜெட் என்​பது செல​வு கணக்கு மட்​டுமல்ல. ஒரு திரைப்​படத்​தின் காட்​சிமொழி, படப்​பி​டிப்​பின் சுதந்​திரம், தொழில்​நுட்ப வசதி​கள், ஒளிப்​ப​திவாளரின் படைப்​பாற்​றல் ஆகிய அனைத்​தையும் தீர்​மானிக்​கும் முக்​கியக் காரணி அது.

ஹாலிவுட்​டின் ஸ்டூடியோ முறை முதல் இந்​தி​யாவின் குறைந்த செல​வி​லான சுயாதீனத் திரைப்​படங்​கள், பிரம்​மாண்​ட​மான நட்​சத்​திரப் படங்​கள், ஓடிடி ஒரி​ஜினல்​கள் வரை ஒவ்​வொரு தயாரிப்பு முறையும் ஒளிப்​ப​திவாள​ருக்கு வெவ்​வேறு வாய்ப்​பு​களை​யும் சவால்​களை​யும் வழங்​கு​கின்​றன.

ஹாலிவுட் ஸ்டூடியோ முறையும் சுயாதீனத் திரைப்​படங்​களும்

ஹாலிவுட்​டில் பெரிய ஸ்டூடியோக்​கள் தயாரிக்​கும் திரைப்​படங்​கள், திட்​ட​மிடல், நிதி மேலாண்மை, தொழில்​நுட்ப வசதி​கள், கலை இயக்​கம், விஷுவல் எஃபெக்ட்ஸ் மற்​றும் போஸ்ட் புரொடக் ஷன் ஆகிய​வற்​றில் விரிவான கட்​டமைப்​பைக் கொண்​டிருக்​கின்​றன. பல துறைகளுக்​குத் தனித்​தனியான நிபுணர்​கள் பணி​யமர்த்​தப்​படுவ​தால், ஒளிப்​ப​திவாளர் தனது காட்​சிப்​பார்​வை​யில் அதிக கவனம் செலுத்த முடியும். அதே நேரத்​தில், தயாரிப்பு அட்​ட​வணை, ஸ்டூடியோ நடைமுறைகள் மற்​றும் பட்​ஜெட் கட்​டுப்​பாடுகளுக்​குள் பணி​யாற்ற வேண்​டி​யிருக்​கும்.

இதற்கு மாறாக, சுயாதீனத் திரைப்​படங்​களில் நிதி மற்​றும் தொழில்​நுட்ப வளங்​கள் குறைவாக இருக்​கலாம். ஆனால், கதைக்​குத் தேவை​யான காட்சி மொழியைச் சோதித்​துப் பார்க்​கவும், வழக்​க​மான வணிக சினிமாவின் விதி​முறைகளைத் தாண்​டிச் செல்​ல​வும் வாய்ப்​பு​கள் அதி​கம். இங்கு ஒளிப்​ப​திவாளரின் அனுபவ​மும் படைப்​பாற்​றலும் மிக முக்​கிய​மானதாகின்​றன.

இந்​தி​யத் திரைப்​படத் தயாரிப்​பின் 3 நிலைகள்

இந்​தி​யத் திரைப்​படத் தயாரிப்பை அதன் பொருளாதா​ரக் கட்​டமைப்​பின் அடிப்​படை​யில், பொது​வாகக் குறைந்த பட்​ஜெட், நடுத்​தர பட்​ஜெட், அதிக பட்​ஜெட் என மூன்று பிரிவு​களாகப் புரிந்​து​கொள்​ளலாம். இவற்​றுக்​கென நாடு முழு​வதும் பொருந்​தக்​கூடிய நிலை​யான நிதி வரம்​பு​கள் இல்லை. திரைப்​படத்​தின் மொழி, சந்தை, நட்​சத்​திரங்​களின் ஊதி​யம், படப்​பி​டிப்பு நாட்​களின் எண்​ணிக்கை, தொழில்​நுட்​பக் கலைஞர்​களுக்​கான செல​வு​கள், விஷுவல் எஃபெக்ட்ஸ், படப்​பி​டிப்​புத் தளங்​கள் மற்​றும் தயாரிப்​பின் ஒட்​டுமொத்த அளவு ஆகிய​வற்​றைப் பொறுத்து பட்​ஜெட் வகைப்​பாடு மாறு​படு​கிறது.

குறைந்த பட்​ஜெட் திரைப்​படங்​கள்

குறைந்த எண்​ணிக்​கை​யி​லான படப்​பி​டிப்​புத் தளங்​கள், இயற்​கை​யான ஒளி, சிறிய கேமரா குழு, கிடைக்​கும் இடங்​களின் இயல்​பான அழகைப் பயன்​படுத்​து​தல் போன்​றவை முக்​கியத்​து​வம் பெறுகின்​றன. இங்கு ஒளிப்​ப​திவாளர் ஒவ்​வொரு காட்​சிக்​கும் தனித்​தனியாகப் பெரிய ஒளியமைப்​பு​களை உரு​வாக்க முடி​யாமல் போகலாம். அதற்​குப் பதிலாக, ஜன்​னல் வழி​யாக வரும் ஒளி, தெரு விளக்​கு​கள், நிழல்​கள், இயற்​கை​யான வண்​ணங்​கள் ஆகிய​வற்​றைப் பயன்​படுத்​திக் காட்​சி​யின் உணர்வை உரு​வாக்க வேண்​டும்.

நடுத்​தர பட்​ஜெட் திரைப்​படங்​கள்

இங்கு கேமரா, லென்ஸ், லைட்​டிங் மற்​றும் கிரிப் உபகரணங்​களில் சிறந்த தேர்​வு​களைச் செய்​வதற்​கான வாய்ப்பு கிடைக்​கிறது. கலை இயக்​கம், படப்​பி​டிப்​புத் தள வடிவ​மைப்பு, கலர் கிரேடிங் மற்​றும் தேவை​யான அளவி​லான விஷுவல் எஃபெக்ட்ஸ் ஆகிய​வற்​றையும் திட்​ட​மிட முடியும். கலைநோக்​கையும் தயாரிப்​புச் செல​வையும் சமநிலைப்​படுத்​து​வது​தான் ஒளிப்​ப​திவாளரின் முக்​கியப் பணி.

அதிக பட்​ஜெட் திரைப்​படங்​கள்

பிரம்​மாண்​ட​மான அரங்க அமைப்​பு​கள், பல கேமரா அமைப்​பு​கள், விரிவான ஒளியமைப்புகள், கிரேன், டாலி இயக்​கங்​கள், வெளி​நாட்​டுப் படப்​பி​டிப்​பு​கள், விரிவான விஷுவல் எஃபெக்ட்ஸ் மற்​றும் நீண்ட பின் தயாரிப்​புப் பணிகள் ஆகிய​வற்​றைச் செயல்​படுத்​து​வதற்​கான வாய்ப்​பு​கள் கிடைக்​கின்​றன. ஆனால், அதிக வளங்​கள் இருப்​ப​தால் மட்​டுமே சிறந்த ஒளிப்​ப​திவு உரு​வாகி​விடாது. கிடைக்​கும் வளங்​களை எவ்​வாறு கலைநயத்​துடனும் படைப்​பாற்​றலுடனும் பயன்​படுத்து​கிறோம் என்​பதே முக்​கியம்.

குறைந்த பட்​ஜெட்

சவால்​களில் மலரும் படைப்​பாற்​றல் குறைந்த பட்​ஜெட் திரைப்​படங்​களில், ஒளிப்​ப​திவாளரின் உண்​மையான திறமை வெளிப்​படுவது, கிடைக்​கும் வளங்​களின் வரம்​பு​களுக்​குள் காட்​சி​யின் அழகியலை​யும் தரத்​தையும் தக்​கவைத்​துக்​கொள்​வதில்​தான். கூடுதல் படப்​பி​டிப்பு நாட்​கள் இல்​லாமை, விரும்​பிய லொக்​கேஷன்​களை தேர்ந்​தெடுப்​ப​தில் உள்ள கட்​டுப்​பாடுகள், பெரிய ஒளியமைப்​பு​களை உரு​வாக்​கு​வதற்​கான நேரம் மற்​றும் நிதிப் பற்​றாக்​குறை என பல சவால்​களை அவர் எதிர்​கொள்ள வேண்​டி​யிருக்​கிறது.

இத்​தகைய சூழலில், திட்​ட​மிடல் என்​பது வெறும் தயாரிப்​புப் பணி​யாக இல்​லாமல், ஒளிப்​பதிவின் படைப்​பாக்​கச் செயல்​முறை​யாகவே மாறுகிறது. இயற்கை ஒளி​யின் தன்​மையை உணர்ந்து சரியான நேரத்​தில் பட​மாக்​கு​வது, ஒரே லொக்​கேஷனின் வெவ்​வேறு சாத்​தி​யங்​களைப் பயன்​படுத்​து​வது, குறைந்த உபகரணங்​களைக் கொண்டே மாறு​பட்ட காட்​சித் தோற்​றங்​களை உரு​வாக்​கு​வது என ஒவ்​வொரு முடிவும் முக்​கியத்​து​வம் பெறுகிறது. வளங்​களின் பற்​றாக்​குறை, சில நேரங்​களில், வழக்​க​மான அணுகுமுறைகளைக் கடந்து சிந்​திக்​கவும், எளிமைக்​குள் அழகியலைக் கண்​டடைய​வும் ஒளிப்​ப​திவாளரைத் தூண்​டு​கிறது.

பிரம்​மாண்​டத் தயாரிப்​புகள்: வாய்ப்​பு​களும் சவால்​களும்

‘சர்​தார் உத்​தம்’ போன்ற திரைப்​படங்​களில், கால​கட்​டத்​தின் உணர்வை உரு​வாக்​கு​வது ஒளிப்​ப​திவாளரின் முக்​கியப் பொறுப்பு. வரலாற்​றுச் சூழல், ஒளி​யின் தன்மை, வண்​ணக் கட்​டுப்​பாடு, காட்​சிகளின் மன​நிலை ஆகிய​வற்றை ஒருங்​கிணைத்து, வரலாற்று உண்​மைத்​தன்​மையையும் உணர்ச்​சி​யின் ஆழத்​தையும் காட்​சிகளில் வெளிப்​படுத்​து​வதே அவரது சவால்.

சஞ்​சய் லீலா பன்​சாலி​யின் திரைப்​படங்​களில் பிரம்​மாண்​ட​மான செட்​கள், உடை வடிவ​மைப்பு, கலை இயக்​கம், ஆழமான வண்​ணத் திட்​டங்​கள், நுட்​பமான ஒளியமைப்பு ஆகியவை ஒருங்​கிணைந்து தனித்​து​வ​மான காட்​சி​யழகை உரு​வாக்​கு​கின்​றன. இங்கு ஒளிப்​ப​திவாளர், புரொடக் ஷன் டிசைனர் மற்​றும் ஆடை வடிவ​மைப்​பாள​ருடன் இணைந்து பணி​யாற்ற வேண்​டும். ஒவ்​வொரு ஒளி மூலமும், ஒவ்​வொரு ஃபிரேமும் காட்​சி​யின் பிரம்​மாண்​டத்தை வெளிப்​படுத்​து​வதோடு, கதையின் உணர்​வையும் ஆழப்​படுத்த வேண்​டும்.

ராஜமவுலி​யின் திரைப்​படங்​களில், பிரம்​மாண்​ட​மான ஆக் ஷன் காட்​சிகள், பல கேமரா கோணங்​கள், சிக்​கலான ப்​ளாக்​கிங், விஎஃப்எக்ஸ் மற்​றும் விரிவான பின் தயாரிப்பு ஆகியவை முக்​கியத்​து​வம் பெறுகின்​றன. இதற்​காக ஒளிப்​ப​திவாளர், இயக்​குநர், சண்​டைக் கலைக் குழு, கலை இயக்​கக் குழு மற்​றும் விஎஃப்எக்ஸ் நிபுணர்​களு​டன் முன்​கூட்​டியே திட்​ட​மிட வேண்​டும். படப்​பி​டிப்​பில் பதிவு செய்​யப்​படும் காட்​சிகளை​யும் டிஜிட்​டல் முறை​யில் உரு​வாக்​கப்​படும் கூறுகளை​யும் இயல்​பாக ஒருங்​கிணைப்​பதே ஒளிப்​ப​திவாளரின் முக்​கியத் தொழில்​நுட்​பப் பொறுப்​பாகும்.

இத்​தகைய பிரம்​மாண்​டத் தயாரிப்​பு​களில், அதிக வளங்​கள் ஒளிப்​ப​திவாள​ருக்​குப் படைப்​புச் சுதந்​திரத்தை விரிவுபடுத்து​கின்​றன. அதேவேளை​யில், பல்​வேறு துறைகளின் ஒருங்​கிணைப்பு, காட்​சித் தரத்​தைத் தொடர்ந்து பராமரித்​தல், கடுமையான படப்​பி​டிப்பு அட்​ட​வணைக்​குள் பணி​யாற்​றுதல் ஆகியவை முக்​கியச் சவால்​களாக அமை​கின்​றன.

ஓடிடி ஒரி​ஜினல்​கள்

புதிய தயாரிப்பு அணுகுமுறை ஓடிடி தளங்​களுக்​கான திரைப்​படங்​களும் வெப் தொடர்​களும் ஒளிப்​ப​திவுக்​குப் புதிய வாய்ப்​பு​களை உரு​வாக்​கி​யுள்​ளன. இவை பிரம்​மாண்​ட​மான பட்​ஜெட்​டி​லிருந்து குறைந்த வளங்​களைக் கொண்ட கதை மையத் தயாரிப்​பு​கள் வரை மாறு​படு​கின்​றன. பல எபிசோடுகளைக் கொண்ட தொடர்​களில், காட்​சித் தொடர்ச்சி, சீரான வண்​ணத் தோற்​றம், வெவ்​வேறு இயக்​குநர்​கள் அல்​லது ஒளிப்​ப​திவாளர்​கள் பணி​யாற்​றும்​போதும் ஒரே காட்சி மொழியைப் பேணுதல் ஆகியவை முக்​கிய​மானவை. மேலும், மொபைல் திரை முதல் பெரிய தொலைக்​காட்​சித் திரை வரை வெவ்​வேறு சாதனங்​களில் காட்​சிகளின் தெளிவும் உணர்​வும் மாறாமல் வெளிப்​படுவதையும் ஒளிப்​ப​திவாளர் உறுதி செய்ய வேண்​டும்.

ஒளிப்​ப​திவாளரின் திறமை, பட்​ஜெட்​டின் அளவில் அல்ல; அதன் எல்லைகளுக்​குள் அவர் உரு​வாக்​கும் காட்​சிப் பார்​வை​யில் இருக்​கிறது. குறைந்த பட்​ஜெட் படைப்​பாற்​றலைச் சோதிக்​கிறது; நடுத்​தர பட்​ஜெட் கலைக்​கும் தொழில்​நுட்​பத்​துக்​கும் சமநிலை அளிக்​கிறது; பெரிய பட்​ஜெட், காட்​சிப் பிரம்​மாண்​டத்​துக்​கான வாய்ப்​பு​களை விரிவுபடுத்து​கிறது.

இறுதி​யில், விலை​யுயர்ந்த கேம​ராவோ, பிரம்​மாண்​ட​மான செட்டோ ஒரு திரைப்​படத்​தின் காட்​சித் தரத்​தைத் தீர்​மானிப்​ப​தில்லை. கதையை உணர்ந்து, ஒளி, நிழல், வண்​ணம், இடம் ஆகிய​வற்​றைக் கலைநயத்​துடன் கையாளும் ஒளிப்​ப​திவாளரின் பார்​வையே அதன் உண்​மையான காட்​சிமதிப்பை உரு​வாக்​கு​கிறது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here