மார்த்தாண்டன்துறை: நாலட்ஜ் பவுண்டேசன் சார்பில் கல்வி விருது

0
242

கிள்ளியூர் தொகுதி, மார்த்தாண்டன்துறையில் செயல்பட்டு வரும் நாலட்ஜ் பவுண்டேசன்  சார்பில் கல்வியாண்டின் 10 மற்றும் 12-ம் வகுப்பு இறுதி தேர்வுகளில் 90 சதவீதத்துக்கும் மேல் மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவியர் கவுரவிக்கப்பட்டு வருகின்றனர்.

     கடந்த 2023-2024 கல்வியாண்டில் 10 மற்றும் 12-ம் வகுப்புக்களில் 90 சதவீதத்துக்கும் மேல் மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்த மார்த்தாண்டன்துறையை சார்ந்த 

அக்சயா,  அஜினா ஆன்டணி, ஜெஸ்லின் ஆன்மார்ட்டின்,  சாண்டா தாஸ்,  ஜோயல் தார்த்தீஸ், பிறின்சி,  பென்னா வில்சன், அக்சயா ஷிபானி, ஜெபின்சன் ஜாண் ஆகிய மாணவ, மாணவியர் நேற்று (3-ம் தேதி) மாலையில்  கவுரவிக்கப்பட்டனர்.  

      திருவனந்தபுரம் உயர் மறை மாவட்டத்தின் பேராயர்  ஓய்வு பெற்ற சூசைபாக்கியம் பெயரிலான “பேராயர் சூசைபாக்கியம் கல்வி விருதை”  பேராயரின் சொந்த ஊரான மார்த்தாண்டன்துறையில் நடந்த நிகழ்வில் பங்கு பணியாளர்  சுரேஷ்பயஸ் வழங்கினார். நாலட்ஜ் பவுண்டேசன் நிர்வாக இயக்குநர்  ஜஸ்டின் ஆன்டணி வாழ்த்துரை வழங்கினார். ஏராளமான ஆசிரிய, ஆசிரியைகள், அருட்சகோதரிகள், பெற்றோர், மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here