கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகம் அருகே அரசு விருந்தினர் மாளிகை எதிர் பகுதியில் உள்ள கழிவு நீர் ஓடையில் தேங்கி நிற்கும் கழிவு நீர் மாநகராட்சி மூலம் அகற்றும் பணி நடைபெற்றது. இந்த பணியினை நேற்று நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் நேரில் சென்று ஆய்வு செய்தார். கழிவுநீர் அந்த பகுதியில் விடக்கூடாது என்று அருகில் உள்ள வர்த்தக நிறுவனங்கள் மற்றும் வீடுகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.