மார்த்தாண்டம்: இடையூறாக நிறுத்திய பைக்க்களுக்கு பூட்டு

0
241

மார்த்தாண்டத்தில் மேம்பாலத்தின் கீழே மத்திய பகுதியில் இரு புறம் உள்ள கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு வசதியாக நடத்த பைக் நிறுத்த இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த இடங்களில் நாகர்கோவில் திருவனந்தபுரம் மற்றும் வெளியூர்களில் தினமும் தனியார் மற்றும் அரசு அலுவலகங்களில் பணியாற்றி வருகின்றவர்கள் பைக்கில் வந்து பைக் நிறுத்திவிட்டு இரவு வந்து எடுத்துச் செல்கின்றனர்.

    ஆனால் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு பைக் நிறுத்த போதுமான இடமில்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட நாட்களாக இருந்தது. இந்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் டிராபிக் சப் இன்ஸ்பெக்டர் செல்லசாமி தலைமையில் நேற்று அபராதம் விதித்து  ஏழு பைக்கில் இரும்புச் சங்கிலி கட்டி பூட்டப்பட்டது. இந்த நடவடிக்கையை பொது மக்கள் பாராட்டினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here