கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கிய மாவட்ட ஆட்சியர்

0
248

தமிழக இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறையின் சார்பில், டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டம் மற்றும் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான பரிசளிப்பு நிகழ்ச்சியினை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விருதுநகர் மாவட்டத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக நேற்று ( 1 -ம் தேதி) துவக்கி வைத்தார்.  

அதனைத்தொடர்ந்து, கன்னியாகுமரி மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை சார்பில் நாகர்கோவில் எஸ். எல். பி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு  மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா தலைமை வகித்தார்.   நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ. மகேஷ் முன்னிலையில் வீரர் வீராங்கனைகளுக்கு  விளையாட்டு உபகரணங்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட 95 ஊராட்சிகளுக்கு 33 வகை விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here