கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வெள்ளாடிச்சிவிளையைச் சேர்ந்தவர் பனிஷ் (வயது 35), கட்டிட தொழிலாளி. சம்பவத்தன்று அப்பகுதியில் பூஜைக்காக வைக்கப்பட்டு இருந்த விநாயகர் சிலைக்கு பூஜை நடந்தது. பூஜை முடிந்து பிரசாதம் கொடுக்கும் போது ஒருவர் மதுபோதையில் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதை பனிஷ் தட்டிக் கேட்டுள்ளார்.
இதனால் பனிசுக்கும், அப்பகுதியைச் சேர்ந்த ராஜேஸ் என்பவருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் மறுநாள் பனிஷ் தனது வீட்டு முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ராஜேஸ், அவரது சகோதரர் செல்வகணேஷ், ராஜகுமார் ஆகியோர் சேர்ந்து பனிஷை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதில் பனிஷ் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில் ராஜேஸ், செல்வகணேஷ், ராஜகுமார் ஆகியோர் மீது கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.