கிள்ளியூர் தெற்கு ஒன்றிய திமுக செயல்வீரர்கள் கூட்டம் ஒன்றிய செயலாளர் கோபால் தலைமையில்
பாரக்கன்விளையில் நடந்தது. கூட்டத்தில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில், விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வர் ஆக்க வேண்டும், கலைஞருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும், விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமை தொகை வழங்க வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
மேலும் கிள்ளியூர் தெற்கு ஒன்றிய பகுதியான தொலையா வட்டத்தில் குற்றவியல் மற்றும் உரிமைகள் நீதிமன்றம் அமைக்க ஆணை பிறப்பித்த தமிழக முதல்வர், சட்டத்துறை அமைச்சர் மற்றும் இதற்கு முயற்சி எடுத்த அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.