புழல், சூரப்பட்டில் ரூ.701 கோடியில் நடந்துவரும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையப் பணிகளை நகராட்சி நிர்வாகத் துறை செயலர் ஆய்வு

0
20

புழல், சூரப்​பட்​டில் ரூ.701.62 கோடி​யில் நடை​பெற்று வரும் குடிநீர் சுத்​தி​கரிப்பு நிலைய சீரமைப்பு, கட்​டு​மானப் பணிகளை நக​ராட்சி நிர்​வாகத் துறை செயலர் ககன்​தீப் சிங் பேடி ஆய்வு செய்​தார்.

வடசென்னை, மத்​திய சென்னை பகுதி​களுக்கு குடிநீர் வழங்​கும் முக்​கிய ஆதா​ர​மாக புழல் ஏரி உள்​ளது. இதன் அரு​கில் உள்ள 300 மில்​லியன் லிட்​டர் கொள்​ளளவு கொண்ட குடிநீர் சுத்​தி​கரிப்பு நிலை​யம் பயன்​பாட்​டில் உள்ளது.

இதில் பெரும்​பாலான கட்​டமைப்​பு​கள் பழுதடைந்த நிலை​யில் உள்​ளன. இதை 310 மில்​லியன் லிட்​டர் கொள்​ளளவு கொண்ட நிலை​ய​மாக மேம்​படுத்​தும் பணி ரூ.555 கோடி​யில் நடந்து வரு​கிறது. இப்​பணிகளை நக​ராட்சி நிர்​வாகத் துறை செயலர் ககன்​தீப் சிங் பேடி நேற்று ஆய்வு செய்​தார்.

இதைத் தொடர்ந்து ரூ.146.62 கோடி​யில் சூரப்​பட்​டில் புதிதாக அமைக்​கப்​பட உள்ள 47 மில்​லியன்லிட்​டர் கொள்​ளளவு கொண்ட குடிநீர் சுத்​தி​கரிப்பு நிலைய கட்​டு​மானப் பணிகளை​யும் பார்​வை​யிட்​டார்.

இந்த 2 பணிகளை​யும் நிர்​ணயித்த கால அளவுக்​குள் முடித்து, மக்​கள் பயன்​பாட்​டுக்கு கொண்​டுவர வேண்​டும் என்று அதி​காரி​களுக்கு ககன்​தீப் சிங்பேடி அறி​வுறுத்​தினார்.

ஆய்​வின்​போது, சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்​குநர் த.ஆனந்த், செயல் இயக்​குநர் என்.ஓ.சுகபுத்ரா, பொறி​யியல் இயக்​குநர் உ.பர்​வீஸ், தலை​மைப் பொறி​யாளர் கே.உமா, மேற்​பார்வை பொறி​யாளர் கே.கலைச்​செல்​வன் ஆகியோர் உடன் இருந்​தனர்.

புழல் குடிநீர் சுத்​தி​கரிப்பு நிலை​யப் பணி முடிவடையும்​போது, மாதவரம், தண்​டை​யார்​பேட்டை, திரு.​வி.க. நகர், அம்​பத்​தூர், அண்ணா நகர் மண்​டலங்​களுக்கு உட்​பட்ட சுமார் 23 லட்​சம் பேரும், சூரப்​பட்டு சுத்​தி​கரிப்பு நிலை​யப் பணி நிறைவேற்​றப்​படுவதன் மூலம் அம்​பத்​தூர் மண்​டலம், ஆவடி மாநக​ராட்​சிப் பகுதி​களில் உள்ள சுமார் 3.50 லட்​சம் பேரும் பயன்​பெறு​வார்​கள் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here