தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து வரும் ஸ்ருதி ஹாசன் அடுத்து ஹாரர் திரைப்படத்தில் நடிக்கிறார். இதை வசந்த் ரவி நடித்த ‘அஸ்வின்ஸ்’ என்ற உளவியல் ஹாரர் படத்தின் மூலம் கவனம் பெற்ற தருண் தேஜா இயக்குகிறார்.
சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’, சித்தார்த் நடித்த ‘3 பிஹெச்கே’ ஆகிய படங்களைத் தயாரித்த சாந்தி டாக்கீஸ் நிறுவனத்தின் அருண் விஸ்வா தயாரிக்கிறார். இதில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.














