ஐபிஎல் ஏலப் பட்​டியலில் ஆர்யவீர் சேவக்

0
37

ஐபிஎல் கிரிக்​கெட் ஏலப் பட்​டியலில் இந்​திய அணியின் முன்​னாள் வீரர் வீரேந்திர சேவக்கின் மகன் ஆர்யவீர் சேவக் பெயரும் இடம்​பெற்​றுள்​ளது. ஐபிஎல் அணிகளில் இடம்​பெறும் வீரர்​களைத் தேர்வு செய்​வதற்​கான ஏலம் வரும் டிசம்​பர் 16-ம் தேதி கோவாவில் நடை​பெறவுள்​ளது.

இந்த ஏலத்​தில் பங்​கேற்​ப​தற்​காக பல்​வேறு நாடுகளைச் சேர்ந்த தேசிய அணிகளில் இடம்​பெறாத 994 வீரர்​கள் தங்​களது பெயர்களைப் பதிவு செய்​துள்​ளனர். இதில் ஆர்​யாவீர் சேவக்​கும் ஒரு​வர். இந்​தி​யாவி​லிருந்து ஆர்​யாவீர் சேவக், மோஹித் உல்வா ஆகியோர் அடிப்​படை விலை​யாக தலா ரூ.30 லட்​சத்​துக்​கும், இஷாந்த் சர்மா, நிதிஷ் ராணா, மன்​தீப் சிங், மயங்க் மார்க்​கண்டே, நவ்​தீப் சைனி, சேத்​தன் சகாரியா, ஆஸ்திரேலிய வீரர் மிட்​செல் ஸ்​டார்க், நியூஸிலாந்து வீரர் பெவன்-ஜான் ஜேக்​கப்ஸ், இங்​கிலாந்து வீரர் சாம் பில்​லிங்ஸ், ஆஸ்திரேலிய வீரர்​கள் ஸ்​காட் போலண்ட், ஜை ரிச்​சர்ட்​சன் உள்​ளிட்​டோரும் தங்​களது பெயர்​களைப் பதிவு செய்​துள்​ளனர்.

ஆர்​யாவீர், மோஹித் உல்வா ஆகியோர் ஓமனில் அண்​மையில் நடை​பெற்ற யு-19 ஆசி​யக் கோப்பை கிரிக்​கெட் போட்​டி​யில் இந்திய அணி சார்​பில் பங்​கேற்​றனர். இதில் ஆர்​யாவீர் 5 இன்னிங்ஸ்களில் 361 ரன்​கள் குவித்து ரசிகர்​களின் கவனத்தை ஈர்த்​துள்​ளார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here