ஐபிஎல் கிரிக்கெட் ஏலப் பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவக்கின் மகன் ஆர்யவீர் சேவக் பெயரும் இடம்பெற்றுள்ளது. ஐபிஎல் அணிகளில் இடம்பெறும் வீரர்களைத் தேர்வு செய்வதற்கான ஏலம் வரும் டிசம்பர் 16-ம் தேதி கோவாவில் நடைபெறவுள்ளது.
இந்த ஏலத்தில் பங்கேற்பதற்காக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தேசிய அணிகளில் இடம்பெறாத 994 வீரர்கள் தங்களது பெயர்களைப் பதிவு செய்துள்ளனர். இதில் ஆர்யாவீர் சேவக்கும் ஒருவர். இந்தியாவிலிருந்து ஆர்யாவீர் சேவக், மோஹித் உல்வா ஆகியோர் அடிப்படை விலையாக தலா ரூ.30 லட்சத்துக்கும், இஷாந்த் சர்மா, நிதிஷ் ராணா, மன்தீப் சிங், மயங்க் மார்க்கண்டே, நவ்தீப் சைனி, சேத்தன் சகாரியா, ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க், நியூஸிலாந்து வீரர் பெவன்-ஜான் ஜேக்கப்ஸ், இங்கிலாந்து வீரர் சாம் பில்லிங்ஸ், ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்காட் போலண்ட், ஜை ரிச்சர்ட்சன் உள்ளிட்டோரும் தங்களது பெயர்களைப் பதிவு செய்துள்ளனர்.
ஆர்யாவீர், மோஹித் உல்வா ஆகியோர் ஓமனில் அண்மையில் நடைபெற்ற யு-19 ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சார்பில் பங்கேற்றனர். இதில் ஆர்யாவீர் 5 இன்னிங்ஸ்களில் 361 ரன்கள் குவித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
