Home விளையாட்டு செய்திகள் ‘யுவராஜ் சிங்கிடம் 30 நிமிடம் பேசியதால் அதிரடி பாதைக்கு திரும்ப முடிந்தது’ – வைபவ் சூர்யவன்ஷி

‘யுவராஜ் சிங்கிடம் 30 நிமிடம் பேசியதால் அதிரடி பாதைக்கு திரும்ப முடிந்தது’ – வைபவ் சூர்யவன்ஷி

0

இந்​திய கிரிக்​கெட்​டின் இளம் அதிரடி வீரரான வைபவ் சூர்யவன்ஷி, தனது கிரிக்​கெட் ஆதர்ச நாயக​னான யுவராஜ் சிங்குடன் 30 நிமிடங்​கள் தொலைபேசி​யில் பேசி​யது தனது ஆட்டத்தை மீண்​டும் பாதைக்​குக் கொண்​டுவர உதவிய​தாகத் தெரி​வித்​துள்​ளார்.

ஆசிய கோப்பை ரைசிங் ஸ்​டார்ஸ் ஒருநாள் கிரிக்​கெட் போட்​டித் தொடரில், ஐக்​கிய அரபு அமீரகத்​துக்கு எதிரான ஆட்​டத்​தில் இந்திய அணி​யின் 15 வய​தாகும் வைபவ் சூர்யவன்ஷி அதிரடியாக விளை​யாடி 53 பந்​துகளில் 204 ரன்​கள் குவித்​தார். இதில் 28 சிக்​ஸர்​கள், 7 பவுண்​டரி​கள் அடங்​கும். இதன் மூலம் லிஸ்ட் ஏ கிரிக்​கெட்​டில் அதிவேக சதம் மற்​றும் இரட்​டைச் சதம் அடித்​தவர் என்ற சாதனைகளை படைத்​திருந்​தார்.

இந்​நிலை​யில் இந்​திய கிரிக்​கெட் கட்​டுப்​பாட்டு வாரியம் வெளியிட்ட வீடியோவில் அவர் கூறிய​தாவது: யுவ​ராஜ் சிங் சாருடன் சுமார் அரை மணி நேரம் தொலைபேசி​யில் பேசினேன். பேட்​டிங் தொடர்​பாக பல விஷயங்​களை அவர் விளக்​கினார். ஆட்டத்​தின் நடுவே சில பிரச்​சினைகளைச் சந்​தித்து வந்​தேன். அவற்றை அவரிடம் வெளிப்​படை​யாகப் பகிர்ந்​து​கொண்​டேன். அப்​போது, ‘நீ 20 பந்​துகளைச் சந்​தித்​து​விட்​டால் உனது ஸ்​கோர் முற்​றி​லும் மாறி​யிருக்​கும்’ என்று அவர் கூறினார். மேலும், பேட்டிங்​கில் இருந்த சில தொழில்​நுட்​பக் குறைபாடுகளை​யும் சுட்டிக்​காட்​டினார். அது எனக்கு மிகவும் உதவியாக இருந்​தது.

சமீபத்​திய உள்​ளூர் போட்​டி​யில்​கூட என்​னால் ரன் எடுக்க முடியவில்லை. என்ன நடக்​கிறது என்ற குழப்​பத்​தில் எனது கவனம் சிதறி​யிருந்​தது. எனது ஆதர்ச நாயக​னான யுவ​ராஜ் சிங்கிடம் பேசிய பிறகு, அவர் கூறிய அறி​வுரைகளை கவனமாகப் பின்​பற்​றினேன். எனது பேட்​டிங் வீடியோக்​களை​யும் பார்த்து, ஒரு குறிப்​பிட்ட இடத்​தில் தவறு செய்​ததை உணர்ந்​தேன். ஆடுகளத்தின் தன்​மையை முதலில் கவனித்​தேன்.

பந்​துகள் பேட்​டுக்கு நன்​றாக வந்​ததால் எனது இயல்​பான ஆட்டத்தை வெளிப்​படுத்த முடிவு செய்​தேன். ஐபிஎல் தொடருக்குப் பிறகு அகமதாபாத்​தில் அளித்த பேட்​டி​யில், மூன்று வகை​யான கிரிக்​கெட்​டிலும் விளை​யாடும் திறன் எனக்கு இருப்பதாகவும், சூழ்​நிலைக்கு ஏற்ப ஆட்​டத்தை மாற்​றிக்​கொள்ள முடியும் என்​றும் கூறி​யிருந்​தேன்.

அதேபோல், நீண்ட நேரம் நிலைத்து நின்று விளை​யாட வேண்​டும் என்ற மன​நிலை​யுடன்​தான் இந்​தப் போட்​டி​யிலும் களமிறங்கினேன். ஆனால், ஆடுகளத்​தில் பந்​து​வீச்​சாளர்​களுக்கு பெரிய அளவில் சாதகம் இல்​லாததால் எனது பலத்தை நம்பி அதிரடி​யாக விளை​யாடினேன். இவ்​வாறு வைபவ் சூர்​ய​வன்ஷி கூறியுள்​ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version