தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் எதிரொலி: திருப்பரங்குன்றம் மலை பகுதியில் பாதுகாப்பு அதிகரிப்பு

0
25

தீபத்​தூணில் கார்த்​திகை தீபம் ஏற்ற வேண்​டும் என்ற உத்​தரவுக்கு எதிராக உச்ச நீதி​மன்​றத்​தில் தமிழக அரசு சீராய்வு மனு தாக்​கல் செய்​துள்ள நிலை​யில், திருப்​பரங்​குன்​றம் மலைப் பகுதி​யில் போலீஸ் பாது​காப்பு அதி​கரிக்​கப்​பட்​டுள்​ளது.

திருப்​பரங்​குன்​றம் மலை உச்​சி​யில் உள்ள தீபத்​தூணில், இந்த ஆண்டு மட்​டும் கார்த்​திகை தீபம் ஏற்ற உச்ச நீதி​மன்​றம் இடைக்​கால உத்​தரவு பிறப்​பித்​துள்​ளது. இந்த ஆண்டு தீபத் தூணில் கார்த்​திகை தீபம் ஏற்​றப்​படும் என பக்​தர்​கள் பெரும் எதிர்​பார்ப்​பி்ல் இருந்​தனர்.

தீபத் திரு​விழாவை வெகு​விமரிசையாக கொண்​டாட மக்​கள் தயாராகி வரும் நிலை​யில், தீபம் ஏற்ற வேண்​டும் என்ற உத்​தரவுக்கு எதிராக உச்ச நீதி​மன்​றத்​தில் தமிழக அரசு நேற்று திடீரென சீராய்வு மனு தாக்​கல் செய்​துள்​ளது. இத​னால், திருப்​பரங்​குன்​றத்​தில் பதற்​றம் அதி​கரித்​துள்​ளது.

கடந்த ஆண்டு தீபத்​தூணில் கார்த்​திகை தீபம் ஏற்ற வேண்​டும் என உயர் நீதி​மன்​றம் பிறப்​பித்த உத்​தரவை அரசு நிறைவேற்​றாத நிலை​யில், திருப்​பரங்​குன்​றத்​தில் இந்து அமைப்​பினர் திரண்டு பெரிய அளவில் போராட்​டம் நடத்​தினர். அதுபோன்ற சூழல் தற்​போது மீண்​டும் உரு​வாகி உள்​ளது.

தீபம் ஏற்​றும் விவகாரத்​தில் தமிழக அரசு எதிர்ப்பு மன​நிலை​யில் உள்​ள​தால், திருப்​பரங்​குன்​றத்​தில் இந்து அமைப்​பினர் மற்​றும் பக்​தர்​கள் அதிக அளவில் திரள வாய்ப்​புள்​ள​தாக காவல் துறை​யினருக்கு தகவல் கிடைத்​துள்​ளது. இத​னால், கோயில் பகுதி மற்​றும் மலை​யைச் சுற்​றி​லும் போலீ​ஸார் குவிக்​கப்​பட்​டுள்​ளனர். மலை​யிலுள்ள தீபத்​தூண், தர்கா ஆகிய இடங்​களில் பாது​காப்பு அதி​கரிக்​கப்​பட்​டுள்​ளது.

மலைக்​குச் செல்​லும் பழநி ஆண்​ட​வர் கோயில் பாதையில் உள்ள படிக்​கட்​டுகளை மறித்து தடுப்​பு​கள் அமைக்​கப்​பட்​டுள்​ளன. அங்கு போலீ​ஸார் இரவு, பகலாக பாது​காப்​புப் பணி​யில் ஈடு​பட்​டுள்​ளனர்.

மலை​யைச் சுற்​றியுள்ள அனைத்து முக்​கிய பகுதி​களி​லும் முகங்​களை துல்​லிய​மாக அடை​யாளம் காட்​டும் ‘ஏஐ’ கேம​ராக்​களை புதிதாக பொருத்தி வரு​கின்​றனர். திருப்​பரங்​குன்​றத்​தைச் சுற்​றி​லும் ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட போலீ​ஸார் பாது​காப்​புப் பணி​யில் ஈடு​படுத்​தப்​பட்​டுள்​ளனர். வெளி மாவட்ட போலீ​ஸாரும் வரவழைக்​கப்​பட உள்​ள​தாக காவல் துறை வட்​டாரத்​தில் தெரி​விக்​கப்​பட்​டுள்​ளது.

மாவட்ட ஆட்சியரின் உத்தரவுக்காக காத்திருக்கும் கோயில் நிர்வாகம்

உச்ச நீதிமன்றம் தீபம் ஏற்றும் பொறுப்பை ஆட்சியரிடம் ஒப்படைத்துள்ளது. கோயில் நிர்வாகம் அங்கீகரிக்கும் குழுவினர்தான் தீபம் ஏற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளது. இதனால் ஆட்சியர் என்ன சொல்கிறாரோ, அதை நிறைவேற்றுவோம் என கோயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது ஒருபுறம் இருந்தாலும், வழக்கம்போல் உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்து வருகிறது. தீபம் ஏற்ற பயன்படுத்தும் தாமிரக் கொப்பரை, நெய் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் இதுவரை வெளிப்படையாக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here