ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், தனுஷ், மம்மூட்டி இணைந்து நடித்துள்ள ‘ஓ.ம்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
ஆர் டேக் ஸ்டுடியோஸ், வுண்டர்பார் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம், செம்மரக் கடத்தல் குற்றப் பின்னணியை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
ட்ரெய்லர் எப்படி? – “இவற்றில் சில உண்மையாகவே நடந்தவை” என்ற வாக்கியத்துடன் தொடங்கும் இந்த ட்ரெய்லர், இரண்டு கோயில் நகரங்களுக்கு இடையே நடக்கும் செம்மரக் கடத்தல் குறித்தும் அதன் பின்னணியில் இயங்கும் கும்பல் குறித்தும் விவரிக்கிறது. இதனை முறியடிக்க காவல்துறையினர் முன்னெடுக்கும் ‘ஆபரேஷன் மோல்’ என்ற ரகசிய டாஸ்க்கில் ஒருவராக தனுஷ் காட்டப்படுகிறார்.
போலீஸ் அதிகாரியாக சாய் பல்லவி, இந்த ஆபரேஷனை முன்னின்று இயக்கும் கதாபாத்திரத்தில் வருகிறார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு மம்மூட்டி மீண்டும் தமிழ் திரையுலகில் கால் பதித்துள்ள இப்படத்தில், அவரது கதாபாத்திரம் நெகட்டிவ் தன்மை கலந்து ட்ரெய்லரில் காட்டப்படுகிறது. ஆக்ஷன் காட்சிகள் ஆர்வத்தை தூண்டுகின்றன. சாய் அபயங்கரின் பின்னணி இசை ட்ரெய்லரின் விறுவிறுப்பைக் கூட்டியுள்ளது. திரையரங்குகளில் வரும் நவம்பர் 20ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது.














