720 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்: ஜெம் வீரமணி வழக்கில் அருண் ஐபிஎஸ் பெயர் சேர்ப்பு

0
38

சிறுமிகளைப் பாலியல் வன்​கொடுமை செய்ததாக ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணிக்கு எதிராக மொத்​தம் 9 போக்சோ வழக்​கு​கள் பதிவு செய்​யப்​பட்​டுள்​ளன.

இந்த வழக்கை காவல் துறை அதி​காரி​கள் லஞ்​சம் பெற்​றுக் கொண்டு மூடி மறைக்க முயன்​றதால், வழக்கை சிபிஐக்கு மாற்​ற வேண்டும் எனக் கோரி சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வாராகி என்​பவரும், வழக்​கறிஞர் ராஜசேகர் என்​பவரும் மனு தாக்​கல் செய்​துள்​ளனர்.

மேலும் சிறுமிகள் தொடர்​புடைய இந்த வழக்கு தொடர்​பான வீடியோக்​கள் ஊடகங்​களில் வெளியானது தொடர்​பாக நட​வடிக்கை எடுக்​கக் கோரி துளிர் அமைப்​பின் சார்​பில் உயர் நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​யப்​பட்​டிருந்​தது.

இந்த மனுக்​கள் நீதிபதி வி.லட்​சுமி நாராயணன் முன்​னிலை​யில் நேற்று மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தன. அப்​போது சிறப்பு புலனாய்​வுக் குழு தரப்​பி்ல் ஆஜரான மாநில அரசு தலைமை குற்​றவியல் வழக்​கறிஞர் ஆர்.ஜான் சத்​யன், “ சிறுமிகளைப் பாலியல் வன்​கொடுமை செய்​த​தாக ஜெம் வீரமணிக்கு எதிராக பதி​யப்​பட்ட முதல் வழக்​கில், சென்னை போக்சோ சிறப்பு நீதி​மன்​றத்​தில் 720 பக்க குற்​றப்​பத்​தி​ரிகை தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளது.

மேலும் இரு வழக்​கு​களில் 10 நாட்​களுக்​குள் குற்​றப்​பத்​தி​ரிகை தாக்​கல் செய்​யப்​படும்” என்​றார். அதையடுத்து நீதிபதி, இந்த வழக்கு விசா​ரணையை நவ.30-க்கு தள்ளி வைத்​துள்​ளார்.

ஜெம் வீரமணி மீதான புகாரை சரியாக விசாரிக்காத குற்றச்சாட்டின் அடிப்படையில் அருண் ஐபிஎஸ் உட்பட 7 காவல் துறை அதிகாரிகள் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here