ரூ.15 கோடி சொத்து மோசடி வழக்கு: எஸ்பியிடம் நடிகை ஷர்மிலி புகார்

0
26

ஆவாரம்பூ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ஷர்மிலி. இவரது கணவர் சொக்கநாதனுக்கு சொந்தமான ரூ.15 கோடி மதிப்பிலான வணிக இடம் ராமநாதபுரம் நகர் பஜார் பகுதியில் உள்ளது.

அந்த நிலத்தை சிலர் போலி ஆவணங்கள் மூலம் அபகரித்துவிட்டதாக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளர், தென்மண்டல ஐஜி ஆகியோரிடம் சொக்கநாதன் புகார் அளித்திருந்தார். இதன் அடிப்படையில் கடந்த 5-ம் தேதி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார், ராமநாதபுரத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன், சந்திரசேகர், மகேஷ்வரன், நாகேஷ்வரன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு தனது கணவருடன் நடிகை ஷர்மிலி நேற்று வந்தார். மோசடி செய்தவர்களை கைது செய்ய வேண்டும். சொத்தை மீட்டுத்தர வேண்டும் என இருவரும் மனு அளித்தனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here