மணிரத்னத்தின் ‘இஞ்சி வெல்லம்’ ஜன.29-ல் ரிலீஸ்

0
30

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘இஞ்சி வெல்லம்’ படம் 2027 ஜனவரி 29-ல் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகி உள்ளது.

கமல் – த்ரிஷா நடித்திருந்த ‘தக் லைஃப்’ படத்துக்கு பிறகு மணிரத்னம் இயக்கி இருக்கும் படம் ‘இஞ்சி வெல்லம்’ இந்தப் படத்தில் விஜய் சேதுபதி – சாய் பல்லவி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் வெளியீடு குறித்த தகவலை விஜய் சேதுபதி தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், ‘தேதியை குறித்துக் கொள்ளுங்கள். ‘இஞ்சி வெல்லம்’ ஜனவரி 29 முதல் உலகெங்கும் வெளியாகிறது’ என்று தெரிவித்துள்ளார்.  

மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் இந்தியா டாக்கீஸ் இணைந்து தயாரித்திருக்கும் இந்தப் படத்தை லைகா புரொடக் ஷன்ஸ் வழங்குகிறது. இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருக்கிறார். மணிரத்னமும், ரஹ்மானும் இணைந்து பணியாற்றி இருக்கும் 19-வது படம் இது. 

படத்துக்கு அவிக் முகோபாத்யா ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்திருக்கிறார்.

சமீபத்தில், படத்தின் தலைப்பு குறித்த அறிவிப்பின்போது இடம்பெறாமல் வெளியீடு தேதி குறித்த அறிவிப்பில், ‘மீசைய முறுக்கு 2’, ‘418’ ஆகிய படங்களில் நடித்திருக்கும் சைத்ரா ஆச்சர் பெயர் இடம் பெற்றுள்ளது. இதன் மூலம் அவரும் இந்தப் படத்தில் இணைந்திருப்பது உறுதியாகி உள்ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here