நடுரோட்டில் சட்டையைப் பிடித்து இழுத்த காவல் ஆய்வாளருடன் மல்லுக்கட்டிய இளைஞர்

0
14

 கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம் பாக்கத்தில் கடந்த 8-ம் தேதி இரு பெண்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து இருதரப்பைச் சேர்ந்த ஆண்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அது வாக்குவாதமாக மாறி மோதல் உருவானது.

தகவலறிந்த நெல்லிக்குப்பம் காவல் ஆய்வாளர் வேலுமணி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், தலைமைக்காவலர் அமிர்தராஜ் ஆகியோர் நேரில் விசாரணைக்கு சென்றனர். அப்போது 3 பேரை போலீஸார் விசாரணைக்காக போலீஸ் ஜீப்பில் ஏற்ற முற்பட்டபோது, அவர்கள் காவல் ஆய்வாளர் உள்ளிட்ட போலீஸ்காரர்களை தாக்கினர்.

காயமடைந்த 3 போலீஸ்காரரும் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதுகுறித்து நெல்லிக்குப்பம் போலீஸார் 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து புகழ், ஜெகதீஷ், ஹரிஹரன் ஆகிய 3 பேரை கைது செய்தனர். இச்சம்பவத்தில் போலீஸார் முறையான விசாரணை நடத்தாமல் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி நேற்று முன்தினம் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகிகள் நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போலீஸார் உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் மேல்பட்டாம்பாக்கத்தில் விசாரணைக்காக சென்ற காவல் ஆய்வாளர் வேலுமணியின் சட்டையைப் பிடித்துக்கொண்டு போலீஸாருடன் இளைஞர் ஒருவர் மல்லுக்கட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் இளைஞரின் சட்டையைக் காவல் ஆய்வாளர் பிடித்து இழுத்ததால், அவர் தனது சட்டையை விடும்படி கேட்டுக்கொண்டார்.

ஆனால் அவர் விடமறுத்ததால பதிலுக்கு இளைஞரும், காவல் ஆய்வாளர் சட்டையை பிடித்தார். அப்போது இருவருக்கும் வாதம் ஏற்பட்டது. தனது சட்டையை விட்டால், காவல் ஆய்வாளர் சட்டையை விடுவதாக இளைஞர் தெரிவித்தார். இந்த வீடியோ தற்போது வைரலாகி உள்ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here