ஓசூர் அருகே கார் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்ததில் 5 பேர் படுகாயம்

0
31

மலைக்கோயிலுக்கு சென்று திரும்பிய கார் எதிர்பாராதவிதமாக 20 அடி பள்ளத்தில் உருண்டு விபத்துக்குள்ளானதில் 3 சிறுவர்கள் உட்பட 5 பேர் படுகாயமடைந்தனர்.

திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் தினகரன் (57). இவர் தனியார் டிரான்ஸ்போர்ட் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். இவரும் இவரது மனைவி லட்சுமி (47) மற்றும் குடும்பத்தைச் சேர்ந்த 3 சிறுவர்கள் உட்பட 5 பேர், ஓசூரில் மலை மீது அமைந்துள்ள மரகதாம்பிகை உடனுறை சந்திரசூடேஸ்வரர் சுவாமி திருக்கோயிலுக்குச் சுவாமி தரிசனம் செய்ய காரில் சென்றுள்ளனர்.

சுவாமி தரிசனத்தை முடித்துக் கொண்டு, மலையிலிருந்து தேர்பேட்டை வழியாக காரில் கீழே இறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, ஒரு குறிப்பிட்ட வளைவுப் பகுதியில் தடுப்புச் சுவர் இல்லாத சாலையில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சுமார் 20 அடி ஆழமுள்ள பள்ளத்தில் உருண்டு விழுந்து விபத்துக்குள்ளானது.

இதில், காரில் இருந்தவர்களின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அப்பகுதி பொதுமக்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த தினகரன், லட்சுமி மற்றும் 3 சிறுவர்களையும் பத்திரமாக மீட்டனர். மேலும், விபத்தில் படுகாயமடைந்த 5 பேரும் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, ஓசூர் நகர காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மலைப் பாதையில் தடுப்புச் சுவர் இல்லாததே இந்த விபத்துக்கு முக்கியக் காரணம் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ள நிலையில், உடனடியாக பாதுகாப்புத் தடுப்புகள் அமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here