கன்னியாகுமரி மாவட்டம் மருங்கூரை அடுத்த குமாரபுரம் தோப்பூரை சேர்ந்தவர் மெர்லின் சுபாஷ் (வயது37). இவர் சென்டிரிங் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் இரவிபுதூரில் உள்ள தனது வயலுக்கு புறப்பட்டார். அங்குள்ள குளத்தின் கரையில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்து விட்டு வயலுக்குள் சென்றார். சுமார் 15 நிமிடங்கள் கழித்து திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. அதோ யாரோ திருடி சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து மொலின் சுபாஷ் அஞ்சுகிராமம் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் சப்-இன்ஸ் பெக்டர் சோபனராஜ் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி மோட்டார் சைக்கிளை திருடிய மயிலாடி காமராஜர் நகரை சேர்ந்த 17 வயது சிறுவனை கைது செய்தார். அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.














