‘கருப்பர் நகரம்’ படத்தை வெளியிட நீதிமன்றம் இடைக்காலத் தடை

0
21

கோபி நயினார் இயக்​கத்​தில் தொடங்​கப்​பட்ட ‘கருப்​பர் நகரம்’ திரைப்​படத்தை அக்.27 வரை வெளி​யிடக்​கூடாது என இடைக்​காலத் தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்​தர​விட்​டுள்​ளது.

நடிகர் ஜெய், ஐஸ்​வர்யா ராஜேஷ் உள்​ளிட்​டோர் நடித்த படம் ‘கருப்​பர் நகரம்’. கோபி நயினாரின் கதைக்​களம் மற்​றும் இயக்​கத்​தில் தொடங்​கப்​பட்ட இப்​படத்தை, படப்​பி​டிப்பு நடந்து கொண்​டிருந்​த​போதே படத்​தின் தயாரிப்​பாளரான கே.கங்​காதரன், மற்​றொரு தயாரிப்​பாளரான ஆர்.ரமேஷ் என்​பவருக்கு விற்று விட்​ட​தாகக் கூறப்​படு​கிறது.

தன்​னிடம் தடை​யில்லா சான்று பெறாமலும், தனக்கு வழங்க வேண்​டிய சம்​பள பாக்​கியை வழங்​காமலும் புதிய தயாரிப்​பாளரான ஆர்.ரமேஷ் அப்​படத்​தின் தொடர்ச்​சியை வேறு ஒரு இயக்​குநரை வைத்து பட​மாக்​கிய​தாக கோபி நயினார் தரப்​பில் குற்​றம் சாட்​டப்​பட்​டது.

இந்​நிலை​யில் ‘கருப்​பர் நகரம்’ படத்தை வெளி​யிடக்​கூடாது என தடை கோரி கோபி நயினார் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​தார்.

அதில் தனக்கு வழங்க வேண்​டிய சம்​பள பாக்​கி​யுடன் தனது கதையை வைத்து பட​மாக்​கி​யுள்​ள​தால் உரிய இழப்​பீடு வழங்க வேண்​டும் என்​றும் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசா​ரித்த நீதிபதி பி.பி.பாலாஜி, அக்.27 வரை இப்​படத்தை வெளி​யிடக்​கூடாது என இடைக்​காலத் தடை விதித்து உத்​தர​விட்​டார். மேலும்

இந்த வழக்​கில் படத்​தயாரிப்​பாளர் ஆர்.ரமேஷ் தரப்​பில் பதிலளிக்க உத்​தர​விட்டு விசா​ரணையை அக்.27-க்கு நீதிபதி தள்ளி வைத்​துள்​ளார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here