குமரி மாவட்டம் திங்கள்சந்தையில் அரசு பள்ளியில் மின்னல் தாக்கிய ‎சம்பவத்தில் HM அறை தீயில் கருகியது

0
45
திங்கள்சந்தை அருகே ஆலங்கோடு அரசு நடுநிலைப் பள்ளியில் மின்னல் தாக்கியதால் தலைமை ஆசிரியர் அறையில் இருந்த மின்சாதனங்கள் மற்றும் கோப்புகள் தீயில் எரிந்து சேதமடைந்தன.
திங்கள்சந்தை அருகே ஆலங்கோடு அரசு நடுநிலைப் பள்ளியில் மின்னல் தாக்கி தலைமை ஆசிரியர் அறையில் தீ விபத்து ஏற்பட்டது. இடி, மின்னலுடன் பெய்த கனமழையின்போது ஏற்பட்ட மின்னல் தாக்கத்தால் மின்சார வயர்கள், சிசிடிவி கண்காணிப்புக்கான டிவி, லேப்டாப், டேபிள் பேன், முக்கிய கோப்புகள் மற்றும் மாணவர்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த புத்தகங்கள் எரிந்து நாசமாகின.

திங்கள்சந்தை அருகே அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் அறையில் மின்னல் தாக்கியதால் மின் சாதனங்கள், கோப்புகள் எரிந்து நாசமாகியது.

‎குமரி மாவட்டம் திங்கள்சந்தையில் இருந்து அழகியமண்டபம் செல்லும் சாலை ஆலங்கோடு பகுதியில் அரசு நடுநிலைப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.

‎‎இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அந்த பகுதியில் இடி மின்னலுடன் பலத்த கன மழை பெய்தது. அப்போது திடீரென ஏற்பட்ட மின்னல் பள்ளியின் கூரையை தாக்கியது. இதனால் ஏற்பட்ட அதிக மின்னழுத்தம் காரணமாக மின்சார ஒயர்கள், தலைமை ஆசிரியர் அறையில் இருந்த சிசிடிவிக்காக அமைக்கப்பட்ட டிவி, லேப் டாப், டேபிள் பேன் மேலும் அங்கு பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த சில கோப்புகளும் மாணவர்களுக்கு கொடுக்க வைத்திருந்த புத்தகங்களும் எரிந்து நாசமாகின.

‎

மின்னல் தாக்கி மின்சாதனங்கள் தீப்பிடித்து எரிந்ததால் அங்கு கரும் புகை எழுந்தது. சுவர், டேபிள், அடுக்கி வைத்திருந்த செயர் உள்ளிட்டவைகளும் தீயில் கருகி சாம்பலாகி கிடந்தது. நேற்று காலை ஊழியர்கள் தலைமை ஆசிரியர் அறை கதவை திறந்த போது தான் இந்த சம்பவம் தெரிய வந்தது. அப்போது அறை முழுவதும் புகை மூட்டமாக இருந்தது. இது குறித்து தலைமை ஆசிரியர் உயர் அதிகாரிகளுக்கும், தக்கலை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தார். அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்தை பார்வையிட்டனர்.

‎இந்த சம்பவம் இரவு நடந்ததால் மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் யாரும் இல்லை. இதனால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. மின்னல் தாக்கி பள்ளி தலைமை ஆசிரியர் அறை தீயில் கருகிய சம்பவம் பெரு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here