தாம்பரத்தில் பாதாள சாக்​கடை அடைப்பை சரிசெய்​வ​தில் சிக்கல்

0
22

தாம்​பரம் மாநக​ராட்​சிக்கு உட்​பட்ட பல்​லா​வரம், குரோம்​பேட்​டை, மேற்கு மற்​றும் கிழக்கு தாம்​பரம் பகு​தி​களில் பாதாளச் சாக்​கடைத் திட்​டம் பயன்​பாட்​டில் உள்​ளது.

இப்பகு​தி​களில் பாதாளச் சாக்​கடை​யில் ஏற்​படும் அடைப்​பு​களை அகற்​று​வதற்​காக, சுமார் 5 ஆண்​டு​களுக்கு முன்பு 2 ஜெட்​ராடிங் வாக​னங்​கள் வாங்​கப்​பட்​டன. இந்த வாக​னங்​கள் அதி​கபட்​சம் 2 ஆண்​டு​கள் மட்​டுமே இயக்​கப்​பட்​ட​தாகக் கூறப்​படு​கிறது. அதன்​பிறகு, தகு​திச் சான்று புதுப்​பிக்​கப்​ப​டா​மல், பல்​லா​வரம் வட்டாட்சியர் அலு​வல​கம் அருகே நிறுத்தி வைக்​கப்​பட்​டுள்ளன.

இதே​போல் மும்​மூர்த்தி நகரிலும் ஒரு வாக​னம் பயன்​பாடின்றி நிறுத்​தப்​பட்​டுள்​ளது. வாக​னங்​களை இயக்​கத் தகு​தி​யான ஓட்டுநர்​கள் நியமிக்​கப்​ப​டாததும் இதற்கு ஒரு காரண​மாகக் கூறப்படு​கிறது. 3 ஆண்​டு​களாக வாக​னங்​கள் பயன்​பாடின்றி நிறுத்​தப்​பட்​டுள்​ள​தால், மக்​கள் வரிப் ​பணம் வீணடிக்கப்படுவதாக சமூக ஆர்​வலர்​கள் குற்​றம்​சாட்​டு​கின்றனர்.

பரு​வ​மழை​யின்​போது பாதாளச் சாக்​கடை​யில் அடைப்பு ஏற்பட்டால், அதை உடனடி​யாக அகற்​று​வ​தில் சிக்​கல் ஏற்​ப​டும் அபா​யம் உள்​ளது. எனவே, இந்த வாகனங்​களை புதுப்​பித்து எப்​.சி. செய்து மீண்​டும் பயன்​பாட்​டுக்​குக் கொண்​டுவர வேண்​டும் என்று சமூக ஆர்​வலர்​கள் கோரிக்​கை விடுத்​துள்​ளனர்​.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here