பஞ்சாப் முதல்வரின் அலுவலகம், அதிகாரி வீட்டில் திடீர் சோதனை

0
11

பஞ்சாப் மாநிலத்தில் நடந்த ஊழல் முறைகேட்டில் முதல்வர் பகவந்த் மானின் சிறப்பு அதிகாரிக்கு தொடர்பு இருப்பதாக அமலாக்கத்துறை புகார் தெரிவித்திருந்த நிலையில் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில், சிபிஐ அதிகாரிகள் நேற்று முதல்வர் பகவந்த் மானின் முகாம் அலுவலகம், சண்டிகரில் உள்ள முதல்வரின் சிறப்பு அதிகாரியின் வீடு ஆகியவற்றில் சோதனை நடத்தினர். இதுகுறித்து பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் தனது எக்ஸ் தளப் பதிவில் கூறும்போது, “அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்காக பாஜக தயாராகி வருவதை இந்த சோதனை காட்டுகிறது.

என்னுடைய முகாம் அலுவலகத்திலும், என்னுடைய சிறப்பு அதிகாரி வீட்டிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி உள்ளனர். பஞ்சாப் அரசு மீதும், என் மீதும் வீண் பழி சுமத்தி அவப்பெயரை ஏற்படுத்தவே அமலாக்கத் துறை, சிபிஐ-யை என் மீது பாஜக ஏவி விடுகிறது. என் மீது மக்கள் வைத்துள்ள செல்வாக்கை அழிக்க நினைக்கிறது பாஜக” என்றார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here