நேஷன்ஸ் லீக் கால்பந்து தொடர் ரொனால்டோ இல்லாமல் போர்ச்சுகல் வெற்றி

0
27

நேஷன்ஸ் லீக் கால்​பந்து தொடரில் நேற்று போர்ச்​சுகலின் போர்ட்டோ நகரில் உள்ள டிரா​காவோ மைதானத்​தில் நடை​பெற்ற லீக் ஆட்​டத்​தில் போர்ச்​சுகல் – நார்வே அணி​கள் மோதின.

இதில் நட்​சத்​திர வீரரும் கேப்​ட​னுமான கிறிஸ்​டி​யானோ ரெனால்டோ இல்​லாமல் களமிறங்​கிய போர்ச்​சுகல் அணி 2-1 என்ற கோல் கணக்​கில் வெற்றி பெற்​றது.

அந்த அணி தரப்​பில் ஜோவா கான்​செலோ (38-வது நிமிடம்), கொன்​சாலோ ரமோஸ் (79-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்​தனர். நார்வே அணி சார்​பில் 36-வது நிமிடத்​தில் கிறிஸ்​டோபர் அஜர் கோல் அடித்​தார். ‘ஏ4’ பிரி​வில் இடம் பெற்​றுள்ள போர்ச்​சுகல் அணிக்கு இது 4-வது வெற்​றி​யாக அமைந்​தது. இதன் மூலம் அந்த அணி கால் இறுதி சுற்​றுக்கு முன்​னேறியது.

இந்​தத் தொடரில் 41 வயதான கிறிஸ்​டி​யானோ ரொனால்​டோ, வேல்ஸ் அணிக்கு எதி​ரான தொடக்க ஆட்​டத்​தில் மட்​டும் விளை​யாடி​னார். போர்ச்​சுகல் அணி 1-0 என்ற கணக்​கில் வெற்றி பெற்​றிருந்த அந்த ஆட்​டத்​தில் ரொனால்டோ பாதி​யிலேயே வெளியே எடுக்​கப்​பட்டு கொன்​சாலோ ரமோஸ் ரவேல்ஸ் சேர்க்​கப்​பட்​டிருந்​தார். அதன்​பிறகு ரொனால்டோ எந்​தப் போட்​டி​யிலும் விளை​யாட​வில்​லை. அனுபவ​மிக்க ரொனால்​டோ, இரண்​டாவது போட்​டி​யில் மாற்று வீரர்​கள் அமரும் பெஞ்​சில் இருந்து ஆட்​டத்​தைப் பார்த்த பின்​னர் அணி​யில் இருந்து வில​கி​னார். அந்த ஆட்டத்​தில் போர்ச்​சுகல் அணி நார்​வேயை 2-1 என்ற கோல் கணக்​கில் வீழ்த்​தி​யது.

ரொனால்டோ அணி​யில் இருந்து வில​கிய பிறகும் போர்ச்​சுகல் அணி எந்​தத் தடு​மாற்​றத்​தை​யும் சந்​திக்​க​வில்​லை. டென்​மார்க்கை 4-2 என்ற கோல் கணக்​கிலும், தற்​போது நார்வே அணியை 2-1 என்ற கோல் கணக்​கிலும் வீழ்த்தி வெற்​றிகளைப் பதிவு செய்​துள்​ளது.

இதற்​கிடையே பயிற்சி முகாமில் இருந்து கடந்த வாரம் ரொனால்டோ வெளி​யேறி​னார். பயிற்​சி​யாளர் ஜார்ஜ் ஜீசஸுடன் ஏற்​பட்ட மோதல் காரண​மாக ரொனால்டோ அணி​யில் இருந்து வெளி​யேறிய​தாக தகவல்​கள் வெளி​யாயின. இதனால் போர்ச்​சுகல் கால்​பந்து வட்​டாரத்​தில் பரபரப்​பும் நிலவி இருந்​தது. இதற்​கிடையே ரொனால்டோ அணி​யில் இருந்து வில​கிய பிறகு, தனது வில​கலுக்​கான காரணங்​கள் குறித்து “உரிய நேரத்​தில் போர்ச்​சுகல் மக்​களிடம் உண்​மை​யைத் தெரி​விப்​பேன்” என்று கூறி​யிருந்​தார். ஆனால், அதன்​பிறகு இந்த விவ​காரம் குறித்து அவர் எந்​தக் கருத்​தும் தெரிவிக்​க​வில்​லை.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here