ஹாங்காங் சிக்ஸஸ் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணிக்கு புவனேஸ்வர் குமார் கேப்டனாக இருப்பார். இப்போட்டி ஹாங்காங்கில் அக்டோபர் 30-ம் தேதி முதல் நவம்பர் 1-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்திய அணியில் கேப்டன் புவனேஸ்வர் குமார், கிருணல் பாண்டியா, ஷசாங்க் சிங், ராகுல் டெவாட்டியா, நிதிஷ் ராணா, ராகுல் திரிபாதி, டி.நடராஜன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். இந்தப் போட்டியில் பங்கேற்கும் ஒவ்வொரு அணியிலும் 6 வீரர்கள் மட்டுமே இடம்பெறுவர்.














