காலை 9 மணி நிலவரம்: மதுராந்தகத்தில் 15.99%, தாராபுரத்தில் 17.55% வாக்குப் பதிவு

0
24

தமிழகத்தில் மது​ராந்​தகம், தாராபுரம் ஆகிய தொகு​தி​களில் இடைத்​தேர்​தல் வாக்​குப்​ப​திவு இன்று காலை 7 மணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காலை 9 மணி நிலவரப்படி, மதுராந்தகத்தில் 15.99%, தாராபுரத்தில் 17.55% வாக்குப்பதிவாகி உள்ளது.

வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடை​பெறவுள்​ளது. தேர்தலில் பதிவான வாக்​கு​கள் வரும் 9-ம் தேதி எண்​ணப்​பட்டு முடிவு​கள் அறிவிக்​கப்பட உள்ளன.

மது​ராந்​தகம் தொகு​தி​யில் மரகதம் குமர​வேல் ​(தவெக), பரந்தாமன் (தி​முக), கணிதா சம்​பத் ​(அ​தி​முக), சுகந்தி (மார்க்சிஸ்ட்), ஜானகி​ரா​மன் (நாம் தமி​ழர்) மற்​றும் சுயேட்​சை​கள் உட்பட 27 பேர் களத்​தில் உள்​ளனர்.

அதே​போல், தாராபுரம் தொகு​தி​யில் சத்​ய​பா​மா (தவெக), சுகன்யா(​தி​முக), பானு​ம​தி (அ​தி​முக), லட்​சுமணன் (சிபிஐ), கார்த்திகா (​நாதக) உட்பட 22 பேர் போட்​டி​யிடு​கின்றனர்.

தாராபுரம் இடைத்தேர்தலில் வாக்களித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தவெக வேட்பாளர் சத்யபாமா, ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என நம்பிக்கை தெரிவித்தார்.

அதிமுக வேட்பாளர் பானுமதி வாக்களித்த பின்னர் அளித்தப் பேட்டியில், “தாராபுரம் எப்போதும் அதிமுகவின் கோட்டை. அதிமுக வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது” என்றார்.

தட்டாஞ்சாவடியில் 19.20% வாக்குப்பதிவு

புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், மங்கலம், தட்டாஞ்சாவடி என இரு தொகுதிகளில் போட்டியிட்டு வென்ற முதல்வர் ரங்கசாமி, தட்டாஞ்சாவடி தொகுதியை ராஜினாமா செய்தார். இதையடுத்து இடைத்தேர்தல் அட்டவணையை கடந்த மாதம் 7-ம் தேதி அதிகாரப்பூர்வமாக தலைமைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதன்படி இன்று (அக்.6) இடைத்தேர்தல் காலை 7 மணிக்கு தொடங்கியது.

தட்டாஞ்சாவடி தொகுதியில் அரசியல் கட்சிகள் சார்பில் 6 பேரும், சுயேச்சைகளாக 5 பேரும் மொத்தமாக 11 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்த், காங்கிரஸ் வேட்பாளர் விநாயகம், திமுக வேட்பாளர் சேதுசெல்வம், இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் அ.மு.சலீம் ஆகியோருக்கு இடையே போட்டி நிலவுகிறது.

இந்நிலையில், தட்டாஞ்சாவடியில் காலை 9 மணி நிலவரப்படி 19.20% வாக்குப்பதிவாகியுள்ளது.

மொத்தமுள்ள 31 வாக்குச்சாவடிகளில் கவுண்டம்பாளையம் முத்து ரத்தின அரங்கம் மேல்நிலைப்பள்ளி பூத், வினோபாநகர் பொய்யாகுளம் கம்யூனிட்டி ஹால் அரங்கு ஆகிய பூத்கள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டன. அதனால், இங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here