ஜந்தர் மந்தரில் 3 பெண் பத்திரிகையாளருக்கு பாலியல் துன்புறுத்தல்: காவல் துறை மீதான புகாரை குற்றப் பிரிவு விசாரிக்க உத்தரவு

0
18

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதி​ராக டெல்லி ஜந்தர் மந்தரில் நடை​பெற்ற போராட்​டத்​தில் செய்தி சேகரிக்​கச் சென்​ற​போது, தங்​களுக்கு டெல்லி காவல் துறை​யினர் பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக 3 பெண் பத்திரி​கை​யாளர்​கள் புகார் தெரி​வித்​துள்​ளனர்.

இதுகுறித்து நேற்று முன்​தினம் நாடாளு​மன்ற சாலை காவல் நிலை​யத்​தில் புகார் அளிக்​கப்​பட்​டது. ஆரம்​பத்​தில் இந்​தப் புகாரைப் பதிவு செய்ய டெல்லி காவல் துறை தயக்​கம் காட்​டிய நிலை​யில், நாடு முழு​வதும் எழுந்த எதிர்ப்​பலைகளை அடுத்​து, புகாரை குற்​றப்​பிரிவு காவல் துறை​யிடம் நியாய​மாக விசா​ரிக்க ஒப்​படைத்​துள்​ளது.

பாதிக்​கப்​பட்ட பத்​திரி​கை​யாளர் ஒரு​வர் கூறும்​போது, “ஜந்​தர் மந்தர் போராட்​டத்​தை படம்​பிடித்​துக் கொண்​டிருந்​தேன். போராட்டக்​காரர்​களைக் கைது செய்​யும்​போது அங்கு பெண் காவலர்​கள் யாரும் இல்​லை. இதுகுறித்து டெல்லி காவல் துறை உதவி ஆணை​யர் விவேக் பகத்​திடம் கேள்வி எழுப்​பிய​போது, அவர் என்னை பாலியல் ரீதி​யாக துன்​புறுத்தி பின்​னோக்​கித் தள்ளி​னார்” எனக் குற்​றம் சாட்​டி​யுள்​ளார்.

இந்​தச் சம்​பவத்​துக்கு இந்​திய பத்​திரிகை கவுன்​சில், பிரஸ் கிளப் ஆஃப் இந்​தியா ஆகியவை கடும் கண்​டனம் தெரி​வித்​துள்​ளன. டெல்லி காவல் துறை துணை ஆணை​யர் நேஹா யாதவ் கூறும்​போது, “மூன்று பெண்​கள் அளித்த புகார்​கள் பதிவு செய்​யப்​பட்​டு, அவர்​களுக்கு மருத்​து​வப் பரிசோதனை​களும் நடத்​தப்​பட்​டுள்​ளன. மேலும் விசா​ரணைக்​காக இவ்​வழக்கு டெல்லி காவல் துறை​யின் குற்​றப்​பிரி​விடம் ஒப்​படைக்​கப்​பட்​டுள்​ளது” என்​றார்.

இந்​தப் பிரச்​சினை​யில் கரப்​பான் பூச்சி ஜனதா கட்​சி​யின் அபிஜித் திப்​கே, அகில இந்​திய மாணவர் சங்​கத்​தின் நேஹா போரா, மக்களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் டெல்லி காவல்​ துறையைக்​ கடுமை​யாகச்​ சாடி​உள்​ளனர்​.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here