ஜெம் வீரமணி வழக்கில் திமுகவை குற்றம்சாட்டிய முதல்வர் விஜய், அமைச்சர்களிடம் ஆதாரம் கேட்டு விசாரணை நடத்த வேண்டும்: திமுக பொருளாளர் வழக்கு

0
22

ஜெம் வீரமணி மீதான போக்சோ வழக்​கில் திமுகவை குற்​றம்​சாட்​டிய முதல்​வர் விஜய் மற்​றும் அமைச்​சர்​கள் நிர்​மல்​கு​மார், ஆதவ் அர்​ஜூனா ஆகியோரிடம் ஆதா​ரம் கேட்​டு, விசா​ரணை நடத்த சிறப்பு புல​னாய்​வுக் குழு​வுக்கு உத்​தர​விடக் கோரி சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் திமுக பொருளாளர் டி.ஆர்​.​பாலு வழக்கு தொடர்ந்​துள்​ளார்.

இதுதொடர்​பாக டி.ஆர்​.​பாலு சார்​பில் மூத்த வழக்​கறிஞர் ஜெ.ர​வீந்​திரன் உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​துள்ள மனு​வில் கூறி​யிருப்​ப​தாவது: சிறுமிகளை பாலியல் வன்​கொடுமை செய்த வழக்​கில் ஜெம் வீரமணியை திமுக பாது​காத்​த​தாக முதல்​வர் விஜய்​யும், வீரமணி மீதான வழக்கை திமுக முடித்து வைத்​த​தாக அமைச்​சர் ஆதவ் அர்​ஜூ​னா​வும், இதற்​காக ரூ.500 கோடியை திமுக அன்​பளி்ப்​பாக பெற்​றுள்​ள​தாக அமைச்​சர் நிர்​மல்​கு​மாரும் பொது​வெளி​யில் திமுக மீது வீண்​பழி சுமத்​தும் நோக்​கில் இஷ்டம்​போல கருத்து தெரி​வித்​துள்​ளனர்.

முதல்​வர் மற்​றும் அமைச்​சர்​களின் இத்​தகைய குற்​றச்​சாட்​டு​கள் இந்த வழக்கை விசா​ரித்து வரும் சிறப்பு புல​னாய்​வுக் குழு​வின் விசா​ரணை​யுடன் நேரடி தொடர்​புடையவை என்​ப​தால் இந்த குற்​றச்​சாட்​டு​களுக்​கான ஆதா​ரங்​களை சமர்ப்​பிக்​கும்​படி அவர்​கள் 3 பேருக்​கும் சம்​மன் அனுப்பி சிறப்பு புல​னாய்​வுக்​குழு விசா​ரிக்க உத்​தர​விட வேண்​டும்.

மேலும், திமுகவை களங்​கப்​படுத்​தும் நோக்​கில் முதல்​வர் மற்​றும் அமைச்​சர்​கள் கூறும் இத்​தகைய குற்​றச்​சாட்​டு​களுக்கு ஆதா​ரம் மற்​றும் ஆவணங்​கள் இருந்​தால் அதை சிறப்பு புல​னாய்​வுக் குழு​விடம் ஒப்​படைக்​காதது ஏன்? அந்த ஆவணங்​கள் ரகசி​ய​மாக இவர்​களுக்கு கிடைத்​துள்​ள​தா? பொது​வெளி​யில் வெளி​யிடப்​பட்​டுள்​ளதா என்​ப​தை​யும் கண்​டறிய வேண்​டி​யுள்​ளது.

ஏனெனில், சிறார்​களுக்கு பாலியல் ரீதி​யாக கொடுமை இழைக்​கப்​பட்​டுள்ள இந்த வழக்​கில் ஆதா​ரங்​களை அழிக்​கவோ, மறைக்​கவோ இடம் கொடுக்​காமல் அவற்றை உடனடி​யாக சேகரிக்க வேண்​டும்.

அவதூறான குற்​றச்​சாட்​டு​களை தெரி​வித்து இருந்​தாலோ, தகவல்​கள், ஆதா​ரங்​களை மறைத்து இருந்​தாலோ சம்​பந்​தப்​பட்​ட​வர்​கள் மீது போக்சோ மற்​றும் பிஎன்​எஸ் சட்​டப்​பிரிவு​களின் கீ்ழ் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்​டும். இவ்​வாறு கூறியுள்​ளார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here