சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் சார்பில் ஆடவருக்கான ‘பி’ டிவிஷன் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதா கிருஷ்ணன் விளையாட்டரங்கில் நேற்று தொடங்கியது. 31 அணிகள் கலந்து கொண்டுள்ள இந்த தொடரை தமிழ்நாடு வாலிபால் சங்கத்தின் வாழ்நாள் தலைவர் அர்ஜூன் துரை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் அரியலூர் மாவட்ட சங்க தலைவர் பூமிநாதன், போட்டியின் ஸ்பான்ஸர் நிறுவனத்தைச் சேர்ந்த ராஜன், முகமது ஹசன், சென்னை மாவட்ட வாலிபால் சங்க நிர்வாகிகளான ஜகதீசன், ஸ்ரீ கேசவன், பாக்கியராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் சென்னை பிரண்ட்ஸ் அணி 25-17,25-21 என்ற செட் கணக்கில் செயின்ட் பீட்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமியை தோற்கடித்தது.