ஆஸ்திரேலிய-ஏ அணியை 171 ரன்களுக்குச் சுருட்டி இந்தியா-ஏ அபாரம்

0
25

ஜப்பானுக்கு எதிரான பிரதான இந்திய அணியின் கோமாளி கிரிக்கெட்டை பார்த்த பிறகே இந்தியா-ஏ, மற்றும் இந்தியா யு-19 மற்றும் உண்மையில் நன்றாக உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

புதுச்சேரியில் நடைபெற்று வரும் இந்தியா-ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிகளுக்கு இடையே நடைபெறும் அதிகாரபூர்வ மற்ற டெஸ்ட் உண்மையில் அதிகாரபூர்வ இந்திய ஆடவர் அணி ஆடும் கிரிக்கெட் போட்டிகளின் லட்சணங்களை விட சிறப்பாக உள்ளது.

இந்தியா-ஏ அணி முதலில் பேட் செய்து 5 விக்கெட் இழப்புக்கு 97 ரன்கள் என்று சரிவடைந்து கொண்டிருக்கும் நிலையில், சாய் சுதர்ஷன் அபாரமான 57 ரன்களுடன் 5-வது விக்கெட்டாக ஆட்டமிழந்தவுடன், விக்கெட் கீப்பர் குமார் குஷாக்ரா அதியற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 113 ரன்கள் என்று சதமெடுக்க, இவருக்கு ஜோடியாக ஆஃப் ஸ்பின்னர் தனுஷ் கோட்டியன் 69 ரன்களைச் சேர்க்க இருவரும் சேர்ந்து ஸ்கோரை 235 ரன்களுக்கு உயர்த்தினர்.

இந்த பார்ட்னர்ஷிப் உதவியால் இந்தியா-ஏ அணி முதல் இன்னிங்சில் 334 ரன்கள் என்ற சவாலான ஸ்கோரை எட்டியது. ஆஸ்திரேலிய தரப்பில் அடுத்ததாக ஆஸ்திரேலிய அணியில், அதாவது நேதன் லயனுக்குப் பிறகு வரவிருப்பதாகக் கருதப்படும் வலது கை ஆஃப் ஸ்பின்னர் கோரி ரோக்கிசியோசி 4 விக்கெட்டுகளையும் டாட் மர்ஃபி 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா-ஏ அணி இந்தியா ‘ஏ’ அணியின் சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 171 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்தியா ‘ஏ’ அணி முதல் இன்னிங்ஸில் எடுத்த 334 ரன்களை விட 163 ரன்கள் பின்தங்கியது.

37 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில் களமிறங்கிய ஆஸி. பேட்டர் ஜேசன் சங்கா, 64 பந்துகளில் 46 ரன்கள் சேர்த்து ஆஸ்திரேலியா ‘ஏ’ அணியை சரிவிலிருந்து மீட்க முயன்றார். தேநீர் இடைவேளைக்குப் பிறகு ஷம்ஸ் முலானியின் பந்துவீச்சில் தொடர்ச்சியாக 2 பவுண்டரிகளை ஸ்வீப் ஷாட் மூலம் விளாசிய சங்கா, பின்னர் துஷார் தேஷ்பாண்டே வீசிய பந்தை பாயின்ட் திசையில் மேலும் 2 பவுண்டரிகள் அடித்தார்.

லியாம் ஸ்காட்டும் அதே பாணியில் அதிரடியாக விளையாடினார். தனுஷ் கோட்டியனின் ஒரே ஓவரில் 3 பந்துகளில் 14 ரன்களை விளாசினார். இதில் பாயின்ட் திசையில் கட் ஷாட், மிட்விக்கெட் திசையில் ஸ்லாக் ஸ்வீப், நேராக அடித்த பவுண்டரி ஆகியவை சூப்பர். முலானியின் பந்துவீச்சிலும் அதே வேகத்தில் தாக்குதல் நடத்த முயன்ற ஸ்காட், கிரீஸை விட்டு வெளியே வந்து பந்தை சைட்ஸ்கிரீன் நோக்கி தூக்கி அடிக்க முயன்றார். ஆனால், முலானி சாதுரியமாக வீச ஸ்காட் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

இதன் பின்னர் 2 ஓவர்கள் கழித்து, பாயின்ட் திசையில் இருந்த பீல்டரைத் தாண்டி பந்தை அனுப்ப முயன்று ரிவர்ஸ் ஸ்வீப் ஆடிய சங்கா தனது விக்கெட்டை தாரை வார்த்தார். தொடர்ந்து கோட்டியன் மற்றும் முலானி இணைந்து ஆஸ்திரேலியா ‘ஏ’ அணியின் பின்வரிசை வீரர்களை விரைவாக வீழ்த்தினர். இதனால் 3-வது நாள் ஆட்டம் தொடங்கும்போது ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிக்கு பாலோ-ஆன் கொடுக்கும் வாய்ப்பு இந்தியா ‘ஏ’ அணிக்கு கிடைத்துள்ளது.

அன்ஷுல் காம்போஜ் தனது இன்ஸ்விங்கர் மூலம் கேம்ப்பெல் கெல்லவேயை வீழ்த்தினார். பிரஃபுல் ஹிங்கே நாதன் மெக்ஸ்வீனியின் ஆஃப்-ஸ்டம்பை பதம் பார்த்தார்.

கடந்த பார்டர்-கவாஸ்கர் தொடரில் இந்திய அணிக்கு எதிராக அதிரடியாக விளையாடி ஆச்சரியப்படுத்திய சாம் கோன்ஸ்டாஸ், இந்த முறை தனது விக்கெட்டுக்கு அதிக மதிப்பு கொடுத்து ஆரம்ப கட்டத்தை நிதானமாக எதிர்கொண்டார். ஆனால், துஷார் தேஷ்பாண்டே வீசிய பந்து திடீரென உள்ளே புகுந்ததால், 25 ரன்களில் எல்பிடபிள்யூ ஆனார்.

இந்தியா ‘ஏ’ அணியின் 334 ரன்களுக்கு எதிராக ஆஸ்திரேலியா ‘ஏ’ அணி 171 ரன்களில் சுருண்டு, 163 ரன்கள் பின்தங்கியுள்ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here