ஆசிய விளையாட்டு: இந்தியாவுக்கு முதல் தங்கம் வென்று தந்த மகளிர் கிரிக்கெட் அணி!

0
18

நடப்பு ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கம் வென்று கொண்டுள்ளது மகளிர் கிரிக்கெட் அணி. கடந்த 2023-ல் ஆசிய விளையாட்டில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தங்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த தொடர் டி20 கிரிக்கெட் பார்மெட்டில் நடைபெற்றது. இதில் காலிறுதியில் ஜப்பான் மற்றும் அரையிறுதியில் பாகிஸ்தானை வீழ்த்தி இருந்தது இந்தியா. இந்நிலையில், இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை உடன் பலப்பரீட்சை செய்தது.

ஜப்பானில் உள்ள நிஷினில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணி டாஸ் வென்று, முதலில் பேட் செய்ய முடிவு செய்தது. இந்திய அணிக்காக ஷெபாலி மற்றும் ஸ்மிருதி இணைந்து முதல் விக்கெட்டுக்கு 99 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஷெபாலி, 29 பந்துகளில் 48 ரன்கள் எடுத்தார்.

ஸ்மிருதி மந்தனா, 45 பந்துகளில் 79 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். அவர் தனது இன்னிங்ஸில் 7 சிக்ஸர்கள் மற்றும் 5 பவுண்டரிகளை விளாசி இருந்தார். ரிச்சா கோஷ் 49 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 216 ரன்கள் எடுத்தது இந்தியா.

217 ரன்கள் என்ற இலக்கை இலங்கை அணி விரட்டியது. அதன் அணி 15.4 ஓவர்களில் 69 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் கேப்டன் சமாரி மட்டுமே 29 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர்.

இந்தியா சார்பில் தீப்தி 3 விக்கெட் வீழ்த்தினார். ஷெபாலி, ஷ்ரேயங்கா, ஸ்ரீ சரணி ஆகியோர் தலா 2 விக்கெட் கைப்பற்றினர். இந்தியா இந்த ஆட்டத்தில் 147 ரன்களில் வென்றதோடு தங்கப் பதக்கமும் வென்று அசத்தியது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here