ஆசிய விளையாட்டுப் போட்டியின் மகளிர் அணி பாட்மிண்டன் போட்டியில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் கஜகஸ்தானை தோற்கடித்தது.
நகோயாவிலுள்ள இச்சினோமியா நகரசபை ஜிம்னாசிய மைதானத்தில் நேற்று நடைபெற்ற மகளிர் பாட்மிண்டன் போட்டியில் இந்திய மகளிர் அணி, கஜகஸ்தானுடன் மோதியது.
முதல் ஒற்றையர் ஆட்டத்தில் பி.வி.சிந்து 21-7, 21-9 என்ற புள்ளிகள் கணக்கில் கஜகஸ்தானின் கமீலா ஸ்மாகுலோவாவையும், உன்னதி ஹூடா 21-7, 21-10 என்ற கணக்கில் அலிசா குலேஷோவாவையும், தன்வி சர்மா 21-5, 21-10 என்ற கணக்கில் டியானா நேம்நோவாவையும் வீழ்த்தினர். இதையடுத்து இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.














