தெரு நாய்​களை கட்டுப்படுத்த சிவசேனா நூதன போராட்டம்

0
20

 நாசிக்​கில் தெரு நாய்​களின் தொல்​லை​யைக் கட்டுப்படுத்தக் கோரி, சிவசேனா நடத்திய போராட்டம் வலைதளங்​களில் வைரலாகி உள்​ளது.

மகா​ராஷ்டிர மாநிலம், நாசிக்​கில் தெரு நாய்​களின் தொல்லை அதி​கரித்​துள்​ளது. இந்​நிலை​யில், சிவசேனா (யுபிடி) இளைஞர் அணி மாவட்​டத் தலை​வர் விக்​ரம் ரந்​தாவே, நிபாட் நகர பஞ்சாயத்து தலைமை அதி​காரி தீரஜ் பாம்​ரே​வின் அலுவலகத்துக்கு சென்​று அவரது மேசை மீது நாய்களை அவிழ்த்து விட்டார்.

இதுகுறித்​து, ரந்​தாவே கூறிய​தாவது: நாசிக்​சில் தெரு நாய்​களின் எண்​ணிக்கை அதி​கரித்​துள்​ளது. இவற்றை கட்​டுப்​படுத்​தக் கோரி கடந்த 6 மாதங்​களாக நிபாட் நகர பஞ்​சா​யத்து தலைமை அதிகாரி தீரஜ் பாம்​ரே​விடம் தொடர்ந்து வலி​யுறுத்தி வரு​கிறேன்.

ஒரு குழந்​தையை நாய் கடித்​துள்​ளது. ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்​கப்​பட​வில்​லை. இதனால் அவரது மேசை மீது 2 நாய்​களை விட்​டேன். இது கடைசி எச்​சரிக்​கை. 8 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்​கா​விட்​டால், மேலும் பல நாய்களை கொண்​டு​போய்​ விடு​வோம்​. இவ்வாறு அவர் கூறினார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here