“ஒவ்​வொரு இந்​தி​யர் மீதும் வரியை சுமத்திய பிரதமர்” – யுபிஐ கட்டணத்துக்கு ராகுல் எதிர்ப்பு

0
25

யுபிஐ பரிவர்த்தனைக் கட்​ட​ணத்தை உடனடி​யாக திரும்​பப் பெற வேண்​டும் என்று பிரதமர் நரேந்​திர மோடிக்கு ராகுல் வேண்​டு​கோள் விடுத்​துள்​ளார்.

மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் தாந்தி தனது எக்ஸ் தளத்​தில் நேற்று வெளி​யிட்​டுள்ள வீடியோ பதி​வில் கூறியுள்ளதாவது: முன்​னாள் பிரதமர் இந்​திரா காந்​தி​யிடம் ஒரு​முறை, “நீங்கள் இடது​சாரி கொள்கை கொண்​ட​வரா அல்​லது வலது​சாரி கொள்கை கொண்​ட​வ​ரா” என்று கேட்​கப்​பட்​ட​போது, நான் இடதுபுறமோ அல்​லது வலதுபுறமோ சாய்​வ​தில்​லை. நான் நேராக நிற்​கிறேன் என்று பதிலளித்​தார்.

ஆனால் பிரதமர் மோடி​யின் அணுகு​முறை முற்​றி​லும் மாறுபட்டது. அவர் இடது​சா​ரி​யும் அல்ல, வலது​சா​ரி​யும் அல்ல. அவர் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் முன் மண்​டி​யிட முடிவு செய்​துள்​ளார்.

யுபிஐ பரிவர்த்​தனைக்கு கட்​ட​ணம் விதிப்பதன் மூல​மும், அமெரிக்கா​வுக்​குப் பெருந்​தொகையை வழங்​கு​வதன் மூல​மும் ஒவ்​வொரு இந்​தி​யர் மீதும் பிரதமர் வரியை சுமத்​தி​யுள்​ளார்.

எனவே, பிரதமர் மோடிஜி… இப்​போதே யுபிஐ பரிவர்த்​தனைக் கட்டணத்தை திரும்​பப் பெறுங்​கள். அமெரிக்​கா​விடம் சரண் அடைவதை இப்​போதே பிரதமர் மோடி நிறுத்தி விட​வேண்​டும். இவ்​வாறு அவர் கூறி​யுள்​ளார்​.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here