மின்வாரியத்தில் கருணை அடிப்படையிலான பணி நியமனத்துக்கு ஊழியரின் மருத்துவச் சான்றிதழ் கட்டாயம்

0
35

மின்வாரியத்தில் கருணை அடிப்​படை​யில் பணி நியமனத்​துக்கு ஊழியர்​களின் மருத்​து​வச் சான்​றிதழை கட்​டா​யம் சமர்ப்​பிக்க வேண்​டும் என்று மின்​வாரி​யம் தெரி​வித்​துள்​ளது.

இதுகுறித்து அனைத்து தலைமை பொறி​யாளர்​களுக்​கும் மின்​வாரி​யம் அனுப்​பி​யுள்ள சுற்​றறிக்கை விவரம்: கருணை அடிப்​படை​யில் வேலை​வாய்ப்பு கோரும் விண்​ணப்​ப​தா​ரர்​களின் சட்​டப்​பூர்வ வாரிசுகளை பரிசீலிக்​கும்​போது, வாரிய சேவை விதி எண் 84-ன் கீழ் பரிந்​துரை செய்​யப்​பட்ட படிவத்​திலேயே, ஊழியரின் மருத்​து​வச் சான்​றிதழ் சமர்ப்​பிக்​கப்பட வேண்​டும்.

மேலும், 55 வயதுக்கு உட்​பட்ட ஊழியர்​களுக்கு வயது முதிர்​வு, இயற்கை உடல்​நலக் குறைவு போன்ற பொது​வான காரணங்​களைக் குறிப்​பிட்டு வழங்​கப்​படும் மருத்​து​வச் சான்​றிதழ்​கள் ஏற்​கப்​ப​டாது.

இந்த செயல்​முறை​களில் தாமதம் ஏற்​படு​வதை தவிர்த்​து, மாநிலம் முழு​வதும் ஒரே​மா​திரி​யான சீரான நடை​முறையைப் பின்​பற்ற பிரத்​யேக சரி​பார்ப்பு பட்​டியல் வழங்​கப்​பட்​டுள்​ளது.

விண்​ணப்​ப​தா​ரர்​கள் சமர்ப்​பிக்​கும் அனைத்து ஆவணங்​களும் முறை​யாக பதிவு செய்​யப்​பட்​டிருக்க வேண்​டும். குறிப்​பாக, குடும்ப உறுப்​பினர்​கள் அனை​வரும் கையெழுத்​திட்ட ஆட்​சேபம் இல்​லாச் சான்​றிதழ் மற்​றும் உறு​தி​மொழிப் படிவங்​கள் ஆகிய​வற்​றின் ஒவ்​வொரு பக்​கத்​தி​லும் விண்​ணப்​ப​தா​ரர் கட்​டா​யம் கையெழுத்து போட்​டிருக்க வேண்​டும்.

18 வயது நிறைவடை​யாத வாரிசு​தா​ரர்​களுக்கு தனி​யாக ஒரு சிறப்பு பதிவேடு பராமரிக்க வேண்​டும். அதில் ஊழியரின் விவரங்​கள், பிறந்த தேதி, விண்​ணப்​பித்த தேதி, வாரிசு​தா​ரர் 18 வயதை அடை​யும் நாள் போன்ற விவரங்​களை துல்​லிய​மாகப் பதிவு செய்ய வேண்​டும். இந்த புதிய நடை​முறை​களை தொய்​வின்றி மிகத் தீவிர​மாக கடைபிடிக்க வேண்​டும். இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here