சென்னையில் செப்.29-ல் மாநில வாலிபால் போட்டி

0
22

சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் சார்பில், பத்ம டாக்டர் பி.சிவந்தி ஆதித்தனார் கோப்பைக்கான தமிழ்நாடு மாநில அளவிலான பள்ளி மாணவர் மற்றும் மாணவிகளுக்கான வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

இந்த போட்டி வரும் செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 2 வரை சென்னை பெரிய மேட்டில் உள்ள நேரு ஸ்டேடியம் மற்றும் எழும்பூரில் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியம் ஆகிய இரு இடங்களில் நடைபெற உள்ளது. தமிழ்நாடு மாநில வாலிபால் சங்கத்தின் ஆதரவுடன் இந்தத் தொடர் நடைபெறுகிறது.

தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளும் இப்போட்டியில் கலந்துகொள்ளலாம். இப்போட்டியில் கலந்துகொள்ள விரும்பும் பள்ளிகள், விண்ணப்பங்களை வரும் 21-ம் தேதிக்குள் தமிழ்நாடு மாநில வாலிபால் சங்கத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். tamilnadustatevolleyball@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவும் அனுப்பலாம். இத்தகவலை சென்னை மாவட்ட வாலிபால் சங்க செயலாளர் சி.கேசவன் தெரிவித்துள்ளார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here