செப்.15-ம் தேதி முதல் டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்று: முதல்வர் விஜய் அறிவிப்பு

0
32

 டிஜிட்​டல் முறையி​லான ஓட்​டுநர் உரிமம், வாக​னப் பதிவு சான்​றிதழ் ஆகியவை செப்​.15-ம் தேதி அண்ணா பிறந்​த​நாள் முதல் வழங்​கப்​படும் என்று முதல்​வர் விஜய் தெரி​வித்​தார்.

சட்​டப்​பேர​வை​யில் நேற்று 110-வது விதி​யின் கீழ் முதல்​வர் விஜய் தெரி​வித்​த​தாவது: தமிழகத்​தில் தற்​போது ஓட்​டுநர் உரிமம் மற்​றும் வாகன பதிவுச் சான்று பெறு​வதற்கு கட்​ட​ண​மாக ரூ.250 விண்​ணப்​ப​தா​ரர்​களால் செலுத்​தப்​பட்​டு, சிப் பொருத்​தப்​பட்ட அட்​டைகளாக தபால் மூலம் விண்​ணப்​ப​தா​ரர்​களின் முகவரிக்கு அனுப்​பப்​பட்டு வரு​கிறது. இதனால் விண்​ணப்​ப​தா​ரர்​களுக்கு கிடைக்க ஒரு வாரம் முதல் ஒரு மாதம் வரை தாமதம் ஏற்​படு​கிறது.

இதை தவிர்க்க, ஓட்​டுநர் உரிமம் மற்​றும் வாகன பதிவுச் சான்​றிதழ் ஆகிய​வற்றை டிஜிட்​டல் முறை​யில் பொது​மக்​கள் தாங்​களே பதி​விறக்​கம் செய்​து​கொள்​ளும் நடை​முறை அறி​முகப்​படுத்​தப்​படும்.

மாநிலம் முழு​வதும் ஓட்​டுநர் உரிமங்​கள், வாக​னப் பதிவுச் சான்​றிதழ்​கள் டிஜிட்​டல் முறை​யில், அதாவது டிஜிட்​டல் டிரை​விங் லைசென்ஸ் மற்​றும் டிஜிட்​டல் ரிஜிஸ்ட்​ரேஷன் சர்​டிபிகேட் வழங்​கும் வசதி செப்.15-ம் தேதி அண்ணா பிறந்​த​நாள் முதல் அறி​முகம் செய்​யப்​படும். இதனால், புதி​தாக வாக​னம் வாங்​கு​வோர் வாக​னப் பதிவை அதாவது, டிஜிட்​டல் ஆர்​சி-யை இணை​யம் வழி​யாக பதி​விறக்​கம் செய்து கொள்​ளலாம். அதே​போல, ஓட்​டுநர் தேர்​வில் தேர்ச்சி பெற்ற விண்​ணப்​ப​தா​ரர்​களுக்​கு, அன்​றைய தினமே ஓட்​டுநர் உரிமம் டிஜிட்​டல் முறை​யில் வழங்​கப்​படும்.

அரசு அலு​வல​கங்​கள் மற்​றும் பிற அதி​காரப்​பூர்வ அமைப்​பு​கள் க்யூஆர் கோடு ஸ்கேன் செய்து மின்​னணு முறை​யில் ஆவணங்​களை சரி​பார்க்க முடி​யும். இதன்​மூலம் போலி ஆவணங்​கள் தவிர்க்​கப்​படும். ஆவணம் தொலைந்​தாலோ, சேதமடைந்​தாலோ மீண்​டும் பதி​விறக்​கம் செய்​து​கொள்​ள​வும், அச்​சிட்​டுக் கொள்​ள​வும் முடி​யும்.

ஓட்​டுநர் உரிமம் பெறு​வதற்​கும், வாக​னத்​தைப் பதிவு செய்​வதற்​கும், வாக​னப் பதிவு புதுப்​பித்​தல் மற்​றும் படிப்​படி​யாக போக்​கு​வரத்து சம்​பந்​த​மான அனைத்து அலு​வலக சேவை​களுக்​கும் தமிழகத்​தில் எந்த ஒரு வட்​டாரப் போக்​கு​வரத்து அலு​வல​கத்​தி​லும் விண்​ணப்​பித்து ‘Anywhere Registration/ Licensing” என்ற முறை​யில் வசதி​கள் படிப்​படி​யாக நடை​முறைப்​படுத்​தப்​படும்​. இவ்​வாறு முதல்​வர்​ தெரி​வித்​தா​ர்​.

பாஸ்​போர்ட் அலு​வல​கம் வருகை: சட்​டப்​பேரவை கூட்​டத்​தொடர் முடிந்​ததும் முதல்​வர் விஜய் முதலீடு​களை ஈர்ப்​ப​தற்​காக இங்​கிலாந்​துக்கு 6 நாட்​கள் வரை சுற்​றுப்​பயணம் செல்ல இருப்​ப​தாக தகவல்​கள் வெளி​யாகி​யுள்​ளன.

இந்​நிலை​யில் ‘டிப்​ளமேட்​டிக் பாஸ்​போர்ட்’ (Diplomatic Passport) சார்ந்த பணி​களை மேற்​கொள்​வதற்​காக முதல்​வர் விஜய் சென்னை அண்​ணா​சாலை​யில் உள்ள மண்டல பாஸ்​போர்ட் அலு​வல​கத்​துக்கு நேற்று வந்​தார். டிப்​ள மேட்​டிக் பாஸ்​போர்ட் பெற ஏற்​கெனவே விண்​ணப்​பித்த நிலை​யில், கைவிரல் ரேகை பதிவு, புகைப்​படம் மற்​றும் தேவை​யான ஆவணங்​களை சமர்ப்​பித்​து​விட்டு புறப்பட்டார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here