ஆந்திரா​வில் தொழிலாளியாக பணியாற்றிய தீவிரவாதி கைது

0
24

 ஆந்திரா​வின் கர்​னூலில் உள்ள ஆலை​யில் தொழிலாளியாக பணி​யாற்றி வந்த தீவிரவாதி கைது செய்யப்பட்டார்.

ஆந்​தி​ரா​வின் கர்​னூல் அரு​கே​யுள்ள கொந்​தி​வாரி கிராமத்​தில் செயல்​படும் ஆலை​யில் மத்​திய புல​னாய்வு துறை அதி​காரி​கள் நேற்று திடீர் சோதனை நடத்​தினர். அங்கு பணி​யில் இருந்த தொழிலாளி நூர் முகமதுவை கைது செய்து விசா​ரணைக்​காக ஹைத​ரா​பாத்​துக்கு அழைத்து சென்​றனர்.

இதுகுறித்து மத்​திய புல​னாய்​வுத் துறை வட்​டாரங்​கள் கூறும்​போது, “செகந்​தி​ரா​பாத்​தைச் சேர்ந்த நூர் முகமது தீவிர​வாத அமைப்​புடன் தொடர்​பில் இருந்​துள்​ளார்.

அவர் குறித்து சிறை​யில் இருக்​கும் மற்​றொரு தீவிர​வாதி கொடுத்த தகவலின்​படி செகந்திரா​பாத் மற்​றும் கர்​னூலில் நூர் முகமது​வின் நடவடிக்கைகளை ரகசி​ய​மாக கண்​காணித்து வந்​தோம். அவரது தீவிர​வாத பின்​னணி உறுதி செய்​யப்​பட்டு இருப்​ப​தால் அவரை கைது செய்​துள்​ளோம்” என்று தெரி​வித்​தன.

கடந்த சில மாதங்​களாக கர்​னூல் ஆலை​யில் தொழிலா​ளி​யாக பணி​யாற்றி வந்த நபர், தீவிர​வாத வழக்​கில் கைது செய்யப்பட்டிருப்​பது சக தொழிலாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here