காட்டுப்பாக்கம் கால்நடை ஆராய்ச்சி மையத்தில் சந்தன மரம் கடத்தப்பட்டதாக வெளியான தகவல் தவறு: பல்கலை. விளக்கம்

0
31

காட்​டுப்​பாக்​கம் கால்​நடை ஆராய்ச்சி மையத்​தில் சந்தன மரங்​கள் வெட்​டிக் கடத்​தப்​பட்​ட​தாக வெளி​யான செய்​தி​கள் தவறானது என்று தமிழ்​நாடு கால்​நடை மருத்​துவ அறி​வியல் பல்​கலைக்​கழகம் தெரி​வித்​துள்​ளது.

வளாகத்​தில் சந்தன மரங்​கள் எது​வும் பராமரிக்​கப்​பட​வில்லை என்று விளக்​கம் அளித்​துள்​ளது. தமிழ்​நாடு கால்​நடை மருத்​துவ அறி​வியல் பல்​கலைக்​கழகத்​தின் கட்​டுப்​பாட்​டில் செங்​கல்​பட்டு மாவட்​டம் காட்​டுப்​பாக்​கத்​தில் இயங்கி வரும் கால்​நடை ஆராய்ச்சி மையத்​தில் சமீபத்​தில் பல கோடி மதிப்​புள்ள சந்தன மரங்​கள் வெட்​டிக் கடத்​தப்​பட்​ட​தாக செய்​தி​கள் வெளி​யாகின.

இதை தமிழ்​நாடு கால்​நடை மருத்​துவ அறி​வியல் பல்​கலைக்​கழகம் மறுத்​துள்​ளது. இதுதொடர்​பாக பல்​கலைக்​கழக பதி​வாளர் இர.நரேந்​திர பாபு வெளி​யிட்ட அறிக்​கை: காட்​டுப்​பாக்​கம் கால்​நடை ஆராய்ச்சி மையத்​தில் சந்தன மரங்​கள் எது​வும் பராமரிக்​கப்​பட​வில்​லை.

பல ஆண்​டு​களுக்கு முன்​பு, வர்தா புயலின் தாக்​கத்​தால் விழுந்து காய்ந்த தேக்கு மரங்​கள், பல்​கலைக்​கழகத்​தால் முறை​யாக அமைக்​கப்​பட்ட அரசு அதி​காரி​கள் கொண்ட குழு​வின​ரால் ஏல முறை​யில் ஏற்​கெனவே அகற்​றப்​பட்​டன.

தற்​போது, பராமரிப்பு காரணங்​களால் உயர்​மட்ட மின் பாதைகள் மற்​றும் நீர்க் குழாய்​களின் அருகே இடையூறாக இருந்த மரக்​கிளை​கள், கால்​நடைகளுக்கு பசுந்​தீவனத்​துக்கு கழிக்​கப்​படும் கிளை​கள் மட்​டுமே அகற்​றப்​பட்​டன.

பல்​கலைக்​கழகத்​தின் விலை நிர்​ணயக் குழு​வால் அதற்கு விலை நிர்​ண​யம் செய்​யப்​பட்​டு, விற்​பனை செய்​து, பல்​கலைக்​கழக கணக்​கில் வரவு வைக்​கப்​பட்​டுள்​ளது.

கால்​நடை ஆராய்ச்சி மையம் 24 மணி நேர கண்​காணிப்​பில் உள்​ளது. அங்​கீகரிக்​கப்​ப​டாத யாரும் உள்ளே நுழைய​வோ, மரங்​களை அப்​புறப்​படுத்​தவோ வாய்ப்பு இல்​லை. இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here