கேரளாவில் தொடரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு: 10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

0
25

கேரளா​வில் தொடர்ந்து பெய்​து​வரும் கனமழையால் வெள்​ளப்​பெருக்கு அதி​கரித்​து, 10 மாவட்​டங்​களில் பள்ளி களுக்கு விடு​முறை அளிக்​கப்பட்​டுள்​ளது. கேரளா​வில் தென் மேற்கு பரு​வ​மழை தீவிரமடைந்துள்​ளது. மாநிலம் முழுவதும் கடந்த சில தினங்​களாக கனமழை பெய்து வரு​கிறது. நேற்​றும் பல பகு​தி​களில் கனமழை பெய்​தது. இதனால் பெரும்​பாலான பகு​தி​களில் வெள்​ளப்​பெருக்கு ஏற்​பட்​டுள்​ளது.

குறிப்​பாக, பத்​தனம்​திட்​டா, ஆலப்​புழா, கோட்​ட​யம் ஆகிய தென் மாவட்​டங்​கள் கனமழையால் கடுமை​யாக பாதிக்​கப்​பட் டுள்​ளன. 10 மாவட்​டங்​களில் நேற்று பள்​ளி​களுக்கு விடு முறை அளிக்கப்பட்டது. சாலைகளில் தண்​ணீர் தேங்​கிய​தா​லும், தாழ்வான பகு​தி​கள் வெள்​ளத்​தில் மூழ்​கிய​தா​லும் மக்​களின் இயல்பு வாழ்க்கை முற்​றி​லு​மாக பாதிக்​கப்​பட்​டுள்​ளது. தாழ்​வான பகு​தி​களில் உள்ள குடி​யிருப்​பு​களை வெள்​ளம் சூழ்ந்​துள்​ளது. இதையடுத்​து, வெள்​ளத்​தால் பாதிக்​கப்​பட்ட பகு​தி​யில் வசிக்​கும் மக்​கள் மீட்​கப்​பட்டு நிவாரண முகாம்​களில் தங்க வைக்கப்பட்டுள்​ளனர்.

கேரளா​வில் கனமழை தொடரும் என்​றும் கடலோர மாவட்​டங்​களில் தரைக்​காற்று மணிக்கு 40 கி.மீ. வேகத்​தில் வீசக்​கூடும் என்​றும் இந்​திய வானிலை ஆய்வு மையம் எச்​சரிக்கை விடுத்​துள்​ளது. இதைத் தொடர்ந்​து, கடல் சீற்​றத்​துடன் காணப்​படும் என்​றும் ஒரு மீட்​டர் உயரத்​துக்கு மேல் பெரிய அலைகள் எழக்​கூடும் என்​றும் அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. இதனால் மீனவர்​கள் கடலுக்​குச் செல்ல வேண்​டாம் என்​றும், பொது​மக்​கள் கடற்​கரை மற்​றும் சுற்​றுலாத் தலங்​களுக்​குச் செல்​வதைத் தவிர்க்​கு​மாறும் மாநில பேரிடர் மேலாண்மை ஆணை​யம் எச்​சரித்​துள்​ளது.

மேலும், நிலச்​சரிவு அபா​யம் உள்ள பகு​தி​யில் வசிக்​கும் மக்​கள் பகல் நேரங்​களில் பாது​காப்​பான இடங்​களுக்​குச் செல்​லு​மாறு அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளனர். ஆற்​றைக் கடப்​ப​தையோ அல்​லது வெள்​ளப் பகு​தி​களைப் பார்​வை​யிடு​வதையோ பொது​மக்​கள் தவிர்க்​கு​மாறு கேட்​டுக் கொள்​ளப்​பட்​டுள்​ளனர். மாநிலம் முழு​வதும் மீட்​புப் பணி​களும் பாது​காப்பு நடவடிக்​கைகளும்​ தீவிர​மாக நடை​பெற்​று வருகின்​றன.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here