மாணவிகளின் போட்டோக்களை இணையதளத்தில் வெளியிட்ட மாணவன்

0
28

நாகர்கோவில்: திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரியில் 17 மாணவிகளின் போட்டோக்களை மார்பிங் முறையில் ஆபாச போட்டோக்களாக மாற்றி ஆபாச இணையதளத்தில் பகிர்ந்த சக மாணவரை போலீசார் கைது செய்தனர்.

திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரியில் படிக்கும் சில மாணவி களின் போட்டோக்கள் சில நாட்களுக்கு முன் ஒரு ஆபாச இணையத்தில் வெளியாயின. இதை அறிந்த மாணவிகள் அதிர்ச்சி அடைந்து மருத்துவக்கல்லூரி போலீசில் புகார் செய்தனர்.

போலீசார் விசாரணை நடத்தியதில் அதே கல் லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வரும் வயநாடு மாவட்டத்தைச் சேர்ந்த ஏபல் 21, அவற்றை வெளியிட்டது தெரிய வந்தது. பின் அந்த மாணவரை போலீசார் கைது செய்தனர்.

சமூக வலை தளங்களில் இருந்து மாணவிகளின் போட்டோக்களை எடுத்து அதை மார்பிங் முறையில் ஆபாச போட்டோக்களாக மாற்றி பகிர்ந்ததை அவர் ஒப்புக்கொண்டார். பின் அவர் திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அங்கு அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டது.

ஏபல் மீது போலீசார் சாதாரண பிரிவுகளில் வழக்கு பதிவு செய்ததால் தான் அவருக்கு ஜாமீன் கிடைத்தது என்று கூறி மருத்துவக் கல்லூரி மாணவ – மாணவிகள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒவ்வொரு மாணவியின் புகாரிலும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here