கோயம்பேடு பேருந்து நிலையத்தை சீரமைக்க வேண்டும்: இபிஎஸ் வலியுறுத்தல்

0
17

இது தொடர்​பாக அவர் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: சென்னை மாநகரில் பாரிமுனையில் இயங்கி வந்த பேருந்து நிலை​யம், மொத்த காய்​கறி வியா​பாரத்​தின் கேந்​திர​மாய்த் திகழ்ந்த கொத்​த​வால்​சாவடி​யால் அப்​பகு​தி​யில் கடும் போக்​கு​வரத்து நெரிசல் மற்​றும் மக்​கள் நெருக்​கடி ஏற்​பட்​டது.

இதற்கு தீர்​வு​காண கோயம்​பேட்​டில் ரூ.103 கோடி​யில் ஆசி​யா​விலேயே மிக பிரம்​மாண்​ட​மான பேருந்து நிலை​யம் அமைக்​கப்​பட்டு 2002-ம் ஆண்டு அதி​முக அரசால் திறக்​கப்​பட்​டது.

கோயம்​பேட்​டிலும் போக்​கு​வரத்து மற்​றும் மக்​கள் நெரிசல் அதி​க​மானதைத் தொடர்ந்​து, செங்​கல்​பட்டு மாவட்​டம், கிளாம்​பாக்​கத்​தில் பிரம்​மாண்​ட​மான புறநகர் பேருந்து நிலை​யம் அமைக்​கப்​பட்​டு, 2019-ம் ஆண்டு அடிக்​கல் நாட்டி பேருந்து நிலை​யப் பணி​களை தொடங்கி வைத்​தேன்.

இங்​கிருந்து தென் மாவட்​டங்​களுக்கு வாக​னங்​கள் இயக்​கப்​படு​வது என்​றும், கோயம்​பேடு பேருந்து நிலை​யத்​திலிருந்து மேற்கு மாவட்​டங்​களுக்​கும், வட மாவட்​டங்​களுக்​கும் பேருந்​துகள் இயக்​கு​வது என்​றும், மாதவரத்​தில் புதி​தாக அமைக்​கப்​பட்ட பேருந்து நிலை​யத்​திலிருந்து ஆந்​திரா மற்​றும் வெளி மாநிலங்​களுக்கு இயக்​கு​வது என்​றும் முடி​வெடுக்​கப்​பட்டு சிறப்​பாக செயல்​பட்டு வந்​தது.

2021-ம் ஆண்டு ஆட்​சிக்கு வந்த திமுக அரசு, இந்​தத் திட்​டங்​களை நாசப்​படுத்​தி, கிளாம்​பாக்​கத்​தில் பேருந்து நிலை​யத்தை திறந்​து, அங்​கிருந்து அனைத்து பகு​தி​களுக்​கும் பேருந்​துகளை இயக்​கியது. இதனால் கோயம்​பேடு பேருந்து நிலை​யத்தை முழு​வது​மாக முடக்கியது.

திமுக அரசின் அலட்​சி​யத்​தால், கோயம்பேடு பேருந்து நிலைய வளாகம் கேட்​பாரற்று சமூக விரோ​தி​களின் கூடார​மாக மாறி​யுள்​ளது. தற்​போது கோயம்​பேடு பேருந்து வளாகம் முழு​வதும் இரவு நேரங்​களில் பல்​வேறு சமூக விரோதச் செயல்​கள் நடை​பெறு​வ​தாக புகார்​கள் எழுந்​துள்​ளன.

சாலைகள் மோச​மான​தாக​வும், உரிய மின் விளக்​கு​கள் இல்​லாமல் கோயம்​பேடு பேருந்து வளாகத்​தின் உட்​புறம் காணப்​படு​கிறது. தற்​போது புதிய அரசு அமைந்த பின்​னரும், கோயம்​பேடு பேருந்து நிலைய வளாகத்​தில் நடை​பெறும் சட்​ட​விரோதச் செயல்​களை கட்​டுப்​படுத்த காவல் துறை​யினர் எந்​த​வித நடவடிக்​கை​யும் எடுக்​க​வில்​லை.

கோயம்​பேடு பேருந்து நிலை​யத்​தைப் போர்க்​கால அடிப்​படை​யில் புனரமைத்​து, ஜெயலலிதா ஆட்​சி​யில் திட்​ட​மிட்​டது​போல், மேற்கு மற்​றும் வட மாவட்​டங்​களுக்​குச் செல்​லும் பேருந்​துகளை​யும், நகரப் பேருந்​துகளை​யும் கோயம்​பேடு பேருந்து நிலை​யத்​திலிருந்து இயக்க வேண்​டும். இவ்​வாறு அறிக்​கை​யில் கூறப்​பட்​டுள்​ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here