ஆசிரியை குளிப்பதை ரகசியமாக வீடியோ எடுத்து பலாத்காரம்: 2 இளைஞர்கள் மீது வழக்கு

0
51

நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே ஆசிரியை குளிப்பதை ரகசியமாக வீடியோ எடுத்து மிரட்டி மாறி மாறி பலாத்காரம் செய்ததாக இரு இளைஞர்கள் மீது மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவின்படி வழக்கு பதிவு செய்யப்பட்டது. தக்கலை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 36 வயதான ஆசிரியை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் கூறியிருந்ததாவது: பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறேன். கணவர் மினிலாரி டிரைவராக உள்ளார். சில ஆண்டுகளுக்கு முன் வீட்டில் குளியலறையில் குளித்த போது அப்பகுதியைச் சேர்ந்த ஜெயகாந்தன் ரகசியமாக அலைபேசியில் வீடியோ எடுத்தார். இதை கவனித்த நான் சத்தம் போட்டதால் அவர் தப்பி ஓடினார். பின் என்னை அலைபேசியில் தொடர்பு கொண்டு இதை வெளியே கூறினால் கொன்று விடுவேன் என மிரட்டினார். இது குறித்து நான் யாரிடம் கூறாததை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு நான் வீட்டில் தனியாக இருக்கும்போது வந்த ஜெயகாந்தன், அந்த வீடியோவை என்னிடம் காட்டி நான் சொல்வது போல் கேட்க வேண்டும் என கூறி மிரட்டி என்னுடன் கட்டாயமாக உடலுறவு கொண்டார். அதன் பிறகு பலமுறை வீடியோவை அழித்து விடுவதாக கூறி நம்ப வைத்து உடலுறவு வைத்துக் கொண்டார். உடலுறவு வைத்ததையும் எனக்கு தெரியாமல் ரகசியமாக வீடியோ எடுத்துள்ளார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here