குவைத், பஹ்ரைன், ஜோர்டானில் உள்ள அமெரிக்கத் தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்

0
14

ஈரானின் தெற்குப் பகுதியை அமெரிக்கா தாக்கிய நிலையில், குவைத், பஹ்ரைன், ஜோர்டானில் உள்ள அமெரிக்கத் தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.

ஈரானின் ராணுவ கட்டளை மையங்கள், கடல்சார் கட்டமைப்புகள், ஏவுகணை மற்றும் ஆளில்லா விமான ஏவுதளங்கள், வான் பாதுகாப்பு அமைப்புகள் ஆகியவற்றை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தியது.

மேலும், தெற்கு ஈரானில் உள்ள ஷிராஸ், தெற்கு கடற்கரையில் உள்ள கொனார்க், சபஹார் பகுதிகளிலும் அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாக ஊடகங்கள் தெரிவித்தன. இந்த தாக்குதலுக்குப் பிறகு தனது சமீபத்திய சுற்றுத் தாக்குதல்களை முடித்துவிட்டதாக அமெரிக்க மத்திய கட்டளை மையம் அறிவித்தது.

அமெரிக்காவின் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் நோக்கில், குவைத், பஹ்ரைன், ஜோர்டானில் உள்ள அமெரிக்கத் தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.

ஈரானின் அணுமின் நிலையத்தின் கட்டுமான தளத்தின் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக, பஹ்ரைனில் உள்ள அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான அமேசானுக்குச் சொந்தமான உள்கட்டமைப்பை தாக்கியதாக ஈரான் புரட்சிகரப் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

பஹ்ரைனின் ஷேக் ஈசா விமானத் தளத்தில் அமெரிக்க ராணுவ வீரர்கள் பயன்படுத்தும் தங்குமிடங்களையும் ஈரானியப் படைகள் குறிவைத்ததாக ஈரானிய அரசு ஊடகங்கள் தெரவித்துள்ளன. அதேநேரத்தில், பஹ்ரைன் அல்லது அமேசான் தரப்பில் இருந்து உடனடியாக எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை என்று அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.

குவைத்தில் உள்ள மூன்று அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது ஆளில்லா விமானத் தாக்குதல்களை நடத்தியதாக ஈரான் ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும், ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவத் தளம் மீது தாக்குதல் நடத்தியதாகவும் அது கூறியுள்ளது. அதேநேரத்தில், ஈரானின் ஐந்து ஆளில்லா விமானங்களை தங்கள் படைகள் இடைமறித்து தாக்கி அழித்ததாக ஜோர்டான் கூறியுள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தியில் இருந்த ஓர் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதையடுத்து அதன் பணியாளர்கள் கப்பலை கைவிட்டு, உயர் காக்கும் படகில் ஏறி சென்றுள்ளனர். மேலும், ஹார்முஸ் ஜலசந்தியில் தெற்குப் பாதை வழியாகச் செல்ல முயன்ற இரண்டு எண்ணெய் கப்பல்கள் வெடிவிபத்துகளுக்கு உள்ளாகி தீப்பிடித்து எரிந்ததாக ஈரானிய புரட்சிகர படை தெரிவித்துள்ளது.

முன்னதாக, கடந்த பிப்​ர​வரி 28-ம் தேதி முதல் அமெரிக்​கா, ஈரான் இடையே போர் நடை​பெற்று வந்​தது. பல்​வேறு திருப்பங்களுக்​குப் பிறகு கடந்த ஜூன் 17-ம் தேதி இரு நாடுகள் இடையே தற்​காலிக அமைதி ஒப்​பந்​தம் கையெழுத்​தானது. இதன்​பிறகு தங்​கள் எல்​லையை ஒட்டி ஹார்​முஸ் ஜலசந்தி வழி​யாகவே எண்​ணெய் கப்பல்​கள் கடந்து செல்ல வேண்​டும் என்று ஈரான் ராணுவம் கட்டுப்பாடு விதித்​தது.

இதை மீறி ஓமன் கடல் வழி​யாக சென்ற எண்​ணெய் கப்பல்​கள் மீது ஈரான் ராணுவம் தாக்​குதல் நடத்​தி​யது. இதன் ​காரண​மாக தற்காலிக அமைதி ஒப்​பந்​தம் ரத்து செய்​யப்​படு​வ​தாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடந்த 8-ம் தேதி அறி​வித்​தார். இதன்​பிறகு அமெரிக்​கா, ஈரான் இடையே தீவிர போர் நடை​பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here